Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கோடை காலத்தில் ஏற்படும் நோய்கள்!

01:28 PM Apr 23, 2024 IST | Web Editor
Advertisement

கோடை காலத்தில் நம்மை பாதிக்கும் நோய்களை பற்றி இங்கு காணலாம்.  

Advertisement

கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது.  வெயிலினால் வியர்வை,  நீரிழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.  மழைக்காலத்தில் மட்டுமே நோய்கள் பரவும் என்றில்லை.  வெயில் காலத்திலும் பல்வேறு உடல் நலக்குறைபாடுகள் ஏற்படுவதுண்டு.  அதன்படி, கோடை காலத்தில் நம்மை பாதிக்கும் நோய்களை பற்றி இங்கு காணலாம்.

ஹீட் ஸ்ட்ரோக்

மிக அதிகமான வெப்பத்தை உடலால் தாங்க முடியாமல் போகும் போது ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது.  வாந்தி மற்றும் குமட்டல்,  வலிப்பு,  வேகமாக மூச்சுவிடுவது,  மயக்கம், குழப்பம்,  அதிக வியர்வை மற்றும் மூச்சுத்திணறல்,  வியர்வை இல்லாமல் வறண்ட சருமம்,  இதயப்படபடப்பு போன்றவை இதற்கான அறிகுறிகள்.  இந்நோயால் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சிக்கன்பாக்ஸ் :

சிக்கன்பாக்ஸ் என்பதை சின்னம்மை என்றும் கூறலாம்.  கோடைக்காலத்தில் இது அதிகம் பரவ கூடியது.  சின்னம்மை வருவதற்கு வெரிசெல்லா ஸோஸ்டர் என்கிற வைரஸ்தான் காரணம்.  இது,  காற்று மூலமாக,  ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும்.  கொப்புளங்கள், தோல் அரிப்பு,  சிவத்தல்,  காய்ச்சல்,  பசியின்மை மற்றும் தலைவலி உள்ளிட்டவை இதற்கான அறிகுறிகள்.

ஃபுட் பாய்ஸனிங் :

சுத்தமற்ற உணவு அல்லது தண்ணீரை உட்கொள்வதால் உணவுவழி நோய்த்தொற்று ஏற்படுகிறது.  பல வகை வைரஸ்கள், பாக்டீரியாக்கள் அல்லது நச்சுகளுடன் தொடர்பு கொண்ட உணவை ஒருவர் சாப்பிடும்போது இந்த நோய் ஏற்படலாம்.   இது வயிற்று வலி, குமட்டல், வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

நீரிழப்பு :

கோடைக்காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்னைகளில் ஒன்று நீரிழப்பு.  கடுமையான வெயிலின் காரணமாக வியர்வை வடிவில் உடலில் உள்ள தண்ணீர் மற்றும் உப்புகள் வெளியேறுகின்றன.

சன்பர்ன் :

சூரியனில் இருந்து வரும் புற ஊதா (UV) கதிர்கள் நம் சரும செல்களை சேதப்படுத்துவதால் சன்பர்ன் ஏற்படுகிறது.  தோல் சிவந்து போதல்,  சிவந்த தோலை தொடும் போது வலி அல்லது எரிச்சல் ஏற்படுதல்,  சோர்வு, லேசான தலைச்சுற்றல் போன்றவை இதற்கான அறிகுறிகள்.

டைஃபாய்டு :

டைஃபாய்டு நீரால் பரவும் நோயாகும்.  அதிக காய்ச்சல்,  சோர்வு,  பலவீனம்,  வயிற்று வலி, தலைவலி மற்றும் பசியின்மை ஆகியவை இதற்கான அறிகுறிகள்.

கொசுக்களால் பரவும் நோய்கள் :

டெங்கு மற்றும் மலேரியா ஆகியவை கோடைக்காலத்தில் கொசுக்களால் பரவும் நோய்கள்.  ஏடிஸ் கொசுக்கள் டெங்குவையும், அனாஃபிலிஸ் கொசுக்கள் மலேரியாவையும் பரப்புகின்றன.

இது தவிர கண் நோய்களும் பரவக் கூடும்.

கோடை நோய்களைத் தவிர்க்க சில வழிகள் : 

Tags :
#summer seasondiseaseHealthinfectionSummor
Advertisement
Next Article