Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"எங்களை மன்னித்து விடுங்கள்..." இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருடிய தேசிய விருது பதக்கத்தை தொங்கவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்!

10:22 AM Feb 13, 2024 IST | Web Editor
Advertisement

இயக்குநர் மணிகண்டன் வீட்டில் மன்னிப்பு கடிதத்துடன் தேசிய விருதுக்கான இரு வெள்ளி பதக்கங்களை கொள்ளை கும்பல் தொங்க விட்டு சென்றுள்ளனர்.

Advertisement

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எழில் நகரைச் சேர்ந்தவர் இயக்குநர் மணிகண்டன்.
இவரின் காக்கா முட்டை,  கடைசி விவசாயி உள்ளிட்ட திரைப்படங்களுகாக தேசிய விருது பெற்றுள்ளார்.  தற்போது குடும்பத்துடன் கடந்த 2 மாதங்களாக வசித்து வருகிறார்.

இதையும் படியுங்கள் ; கோயம்பேடு மார்க்கெட்டில் ரோஜா பூக்கள் வரத்து அதிகரிப்பு – காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு கட்டு ரூ.300க்கு விற்பனை!

இந்நிலையில்,  பூட்டி இருந்த இவரது வீட்டில் கடந்த 8 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து  'கடைசி விவசாயி' திரைப்படத்திற்காக மத்திய அரசால் வழங்கப்பட்ட இரு தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்கள்,   1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து,  பிரபல இயக்குனர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில் இன்று (பிப். 13) இயக்குநர் மணிகண்டன் வீட்டில் பாலித்தீன் பையில் ( அய்யா எங்களை மன்னித்து விடுங்கள் உங்கள் உழைப்பு உங்களுக்கு ) என்ற மன்னிப்பு கடிதத்துடன் தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களை மட்டும் கொள்ளை கும்பல் தொங்க விட்டுச் சென்றுள்ளனர்.  இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் தேசிய விருதுக்கான பதக்கங்களை கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :
#stolencashDirectorManikandanjewelryNationalAwardRobbery
Advertisement
Next Article