For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இயக்குநர் விஷ்ணு வர்தனின்.. நேசிப்பாயா #Trailer வெளியானது!

05:19 PM Sep 24, 2024 IST | Web Editor
இயக்குநர் விஷ்ணு வர்தனின்   நேசிப்பாயா  trailer வெளியானது
Advertisement

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடித்துள்ள நேசிப்பாயா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

Advertisement

இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படத்தை தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியானது. இதில் சரத்குமார், குஷ்பு, அதிதி ஷங்கர் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில், கடந்த ஜூன் 25ம் தேதி இப்படத்திற்கு 'நேசிப்பாயா' என்று தலைப்பு வைக்கப்பட்டு என படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு படத்தின் தலைப்பை அறிவித்தது. மேலும், படம் விரைவில் வெளியாக உள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. படத்தின் தலைப்பை வைத்து இப்படம் காதல் படமாக இருக்கும் என்பதை அறிய முடிகிறது.

இயக்குநர் விஷ்ணுவர்தன் தமிழ் சினிமாவில் அறிந்தும் அறியாமலும், பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கியவர். சமீபத்தில், இந்தியில் படம் ஷேர்ஷா எனும் திரைப்படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன் தற்போது நேசிப்பாயா படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு திரும்பி உள்ளார். இந்த நிலையில் தற்போது நேசிப்பாயா படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement