For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறியனர் இயக்குநர் விக்னேஷ் சிவன்!

07:31 PM Dec 01, 2024 IST | Web Editor
எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறியனர் இயக்குநர் விக்னேஷ் சிவன்
Advertisement

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது எக்ஸ் பக்கத்தை டெலிட் செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

'போடா போடி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார். தயாரிப்பாளராகவும் பாடலாசிரியராகவும் சில திரைப்படங்களில் இருந்துள்ளார். சில படங்களில் சிறப்பு கதாபாத்திரத்திலும் தோன்றியுள்ளார். தப்போது எல்.ஐ.கே.(லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

'நானும் ரவுடி தான்' திரைப்படத்தின் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா இடையே காதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 2022 அக்டோபர் 9ம் தேதி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து 'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' ஆவணப்படம் 18ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த ஆவணப்படத்தில், நடிகர் தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகள் இடம்பெற அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் : உலகின் மிகப்பெரிய பணக்கார சிறுவனாகிறார் ஐயாயின் அர்மிடேஜ்!

சமீபத்தில் வெளியான டிரெய்லரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவிற்கு எதிராய் ரூ.10 கோடி கேட்டு லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் நடிகர் தனுஷ். நடிகை நயன்தாரா தனுஷ் குறித்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்ஸ்டாகிராமில் பதிவினை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து இயக்குநரும் நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் தனுஷ் குறித்து பதிவிட்டார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் அவரது எக்ஸ் சமூக வலைதள கணக்கை நேற்று திடீரென டீஆக்டிவேட் செய்துள்ளார். நடிகை நயன்தாரா குறித்த 'நயன்தாரா - பியான்ட் த பேரிடேல்' ஆவணப்படம் வெளியாவதற்கு முன்பாக நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

அப்போது தனுஷ் பற்றி சில பதிவுகளை இன்ஸ்டா தளத்தில் விக்னேஷ் சிவன் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, விக்னேஷ் சிவனின் எக்ஸ் தளம், மற்றும் இன்ஸ்டா தளங்களில் தனுஷ் ரசிகர்கள் அவரை கமெண்ட் செய்து வந்தனர். இப்படி அடுத்தடுத்து தன்னைப் பற்றிய விமர்சனங்கள் வருவதால் அவர் எக்ஸ் தளத்தை டீஆக்டிவேட் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Tags :
Advertisement