இயக்குநர் ஷங்கரின் சொத்துகள் முடக்கம்... அமலாக்கத்துறை அதிரடி!
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என்ற பெயர்க்கு சொந்தகாரர் ஷங்கர். தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திலும் பல பிரம்மாண்டங்களை காட்டி தனக்கென ஒரு பெயரை உருவாக்கி வைத்திருக்கிறார். இவர் 1993 இல் வெளியான ‘ஜென்டில்மேன்’படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் உள்ளிட்டோரை வைத்து பல படங்களை இயக்கினார்.
இதையும் படியுங்கள் : அசாம் சுரங்க விபத்து | 44 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட தொழிலாளர்களின் உடல்கள்!
இவரது இயக்கத்தில் வெளிவந்த இந்தியன், அந்நியன், சிவாஜி, எந்திரன், 2.0 போன்ற படங்கள் மிகப் பெரிய வெற்றி படங்களாக அமைந்தன. ஆனால் அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இந்தியன் 2, கேம் சேஞ்சர் ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன.
இந்த நிலையில், இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான 3 இடங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.10 .11 கோடி இருக்க கூடும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்குத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.