Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘பயமறியா பிரம்மை’ படத்தின் ஃப்ர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் ரஞ்சித்!

09:26 PM Jun 03, 2024 IST | Web Editor
Advertisement

அறிமுக நாயகன் ஜேடி நடித்துள்ள ‘பயமறியா பிரம்மை’ திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டார். 

Advertisement

அறிமுக இயக்குநர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தில் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நந்தா, வி பிரவீண் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார்.‌ கிரைம் த்ரில்லர் வகையிலான இந்த திரைப்படத்தை 69 எம் எம் ஃபிலிம் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெகதீஷ் மற்றும் ராகுல் கபாலி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து நிலையில் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குநரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் வெளியிட்டு படக்குழுவிற்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.  பயமறியா பிரம்மை இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற ஆறுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகனை வென்றிருக்கிறது. மேலும் இந்த ஆண்டு கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டு, பலரின் பாராட்டுகளை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
Bayamariya Brammaifirst look posterJDKollywoodPa. Ranjith
Advertisement
Next Article