Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இயக்குநர் ராமின் ’ஏழு கடல் ஏழு மலை’ - க்ளிம்ஸ் வீடியோ வெளியீடு!

05:58 PM Jan 02, 2024 IST | Web Editor
Advertisement

ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியானது.

Advertisement

நீண்ட நாட்களுக்கு பின் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடித்திருக்கும் திரைப்படம் ஏழு கடல் ஏழு மலை. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். மாநாடு படத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்.

காதலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் 53வது ரோட்டர்டாம் உலகத் திரைப்பட விழாவுக்குத் தேர்வாகியுள்ளது. ஜன. 25 முதல் பிப். 4 வரை நடைபெறவுள்ள இந்தப் பட விழாவில் பிக் ஸ்க்ரீன்போட்டி பிரிவுக்கு இத்திரைப்படம் தேர்வாகி உள்ளது. இந்நிலையில் படத்தின் புதிய க்ளிம்ஸ் வீடியோ வரும் ஜனவரி 2-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

அதன்படி, வெளியிடப்பட்ட இந்த கிளிம்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. ஏறக்குறைய கற்றது தமிழ் பாணியில் இந்த கிளிம்ஸ் வீடியோ அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.

Tags :
anjaliCinema updatesDirector RamGlimpseNews7Tamilnews7TamilUpdatesNivin PaulySooriYezhu Kadal Yezhu Malai
Advertisement
Next Article