23 பாடல்களுடன் இயக்குநர் ராமின் ‘பறந்து போ’!
ராம் இயக்கியுள்ள ‘பறந்து போ’ படத்தில் 23 பாடல்கள் எழுதியதாக மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.
07:23 PM Feb 01, 2025 IST | Web Editor
Advertisement
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குநர் ராம், தற்போது ‘பறந்து போ’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். காமெடி ஜானரில் உருவாகியிருக்கும் இப்படத்தில் மிர்ச்சி சிவா, க்ரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
செவன் சீஸ் மற்றும் செவன் ஹில்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணைந்து வழங்குகிறது. சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு 23 பாடல்கள் எழுதியுள்ளதாக மதன் கார்க்கி தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையமைத்துள்ளார்.
Advertisement
இந்த நிலையில் ‘பறந்து போ’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வாகியுள்ளது. அதன்படி இப்படம் ரோட்டர்டாம் திரைப்பட விழாவின் லைம்லைட் பிரிவில் திரையிடுவதற்கு தேர்வாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் ராமின் பேரன்பு மற்றும் ஏழு கடல் ஏழு மலை ஆகிய படங்களுக்குப் பிறகு, ரோட்டர்டாம் திரைப்பட விழாவுக்கு பறந்து போ திரைப்படத்தின் பிரீமியர் காட்சி திரையிடப்படவுள்ளது.