பைசன் படத்தை பாராட்டிய முதலமைச்சருக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் நன்றி!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான 'பைசன்' வசூல் குவித்து வருகிறது. அந்த வகையில், படம் வெளியான 5 நாட்களில் உலக அளவில் ரூ.35 கோடி வசூலித்துள்ளது. இந்நிலையில், பைசன் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் ஹீரோ துருவ் விக்ரமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவை பகிர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "என் முதல் படமான பரியேறும் பெருமாளில் ஆரம்பித்து கர்ணன் மாமன்னன் வாழை இப்போது பைசன் வரை என் மீதும் என் படைப்பின் மீதும் பெரும் நம்பிக்கை வைத்து ஆர்வமாய் பார்த்து நேரில் அழைத்து என்னை உச்சிமுகர்ந்து கொண்டாடும் உங்களின் அத்தனை பேரன்பிற்கும் பெரும் பிரியத்திற்கும் என் இதயத்திலிருந்து கசிந்துருகும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா" என்று பதிவிட்டுள்ளார்.