Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) உடல்நலக்குறைவால் காலமானார்!

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார்.
08:36 PM Mar 25, 2025 IST | Web Editor
Advertisement

இயக்குநர் பாரதிராஜா தனது மகன் மனோஜ் பாரதிராஜாவை தாஜ்மஹால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். இப்படம் மனோஜ் பாரதிராஜாவுக்கு நல்ல அறிமுகத்தை தேடித் தந்தது. தொடர்ந்து அவர்  சமுத்திரம், கடல் பூங்கா அல்லு அர்ஜூனா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார்.

Advertisement

மனோஜ் பாரதிராஜா கடந்த 2023ஆண்டு  தனது தந்தையை வைத்து  ‘மார்கழி திங்கள்’ என்ற படத்தை இயக்கினார். இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவில் இயக்குநர் அவதாரம் எடுத்தார். சென்னையில் வசித்து வரும்  மனோஜ் பாரதிராஜா சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

இந்த நிலையில் மனோஜ் பாரதிராஜா (48) மாரடைப்பால் காலமாகியுள்ளார். அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் உள்ளிட்ட பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மனோஜ் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags :
bharathirajaManoj BharathirajaRIP Manoj Bharathiraja
Advertisement
Next Article