இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனை கரம் பிடிக்கும் நடிகர் பிரபுவின் மகள்?
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும், நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
த்ரிஷா இல்லனா நயன்தாரா (2015) என்ற நகைச்சுவைத் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் இயக்குநர், நடிகர், எழுத்தாளர் மற்றும் பாடகராவார். இவரது சமீபத்திய திரைப்படமான, மார்க் ஆண்டனி 15 செப்டம்பர் அன்று வெளியிடப்பட்டது. பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 100 கோடி வசூல் செய்த இத்திரைப்படம் இவரின் திரைவாழ்வில் இதுவரை அதிக வசூல் செய்த படமாகும்.
நடிகர் பிரபுவின் மகளும், விக்ரம் பிரபுவின் சகோதரியுமான ஐஸ்வர்யா பிரபு ஏற்கனவே தனது அத்தையின் மகன் குணாலை திருமணம் செய்து விவகாரத்து பெற்றிருந்தார். இந்நிலையில், நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுடன் ஆதிக் டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே இருவருக்கும் டிசம்பர் 15ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இரு வீட்டார் தரப்பிலிருந்தும் எந்தவித அதிகாரபூர்வமான தகவல்களும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.