For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

எளிமையாக நடைபெற்ற இயக்குநர் அமீர் மகள் திருமணம் - திரண்ட திரையுலகினர்!

06:45 PM Jun 23, 2024 IST | Web Editor
எளிமையாக நடைபெற்ற இயக்குநர் அமீர் மகள் திருமணம்   திரண்ட திரையுலகினர்
Advertisement

மதுரையில் எளிமையாக நடைபெற்ற இயக்குநர் அமீர் மகள் திருமண விழாவில் திரையுலகினர் பலர் கலந்துகொண்டனர். 

Advertisement

மதுரையைச் சேர்ந்த பிரபல இயக்குநரும், நடிகருமான அமீரின் மகள் அனி நிஷாவின்
திருமண விழா மதுரை கருப்பாயூரணி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று
நடைபெற்றது.

மிகவும் எளிமையாக நடைபெற்ற இந்த திருமண விழாவில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் சேரன், வெற்றிமாறன், சசிகுமார் ,
சமுத்திரக்கனி, சரவணன், கரு.பழனியப்பன், எஸ்ஆர் பிரபாகரன், சுப்பிரமணியம்
சிவா மற்றும் நடிகர்கள் ஆர்யா, பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, பாடலாசிரியர்
சினேகன் உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

திருமண விழாவிற்கு வருகை தந்த திரையுலகத்தினரை இயக்குநர் அமீர் ஆரத் தழுவி
வரவேற்றார். திருமணம் நடைபெற்ற பின்னர் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டின் (துஆ) வின் போது மணமக்கள் நீடுழி வாழவேண்டி இயக்குநர் சமுத்திரக்கனி மனமுருக கைகூப்பி  பிரார்த்தனை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து மணமகனோடு சேர்ந்து திரையுலகத்தினர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

எளிமையாக நடைபெற்ற இந்த திருமணத்தில் வந்தவர்களிடம் இருந்து மணமக்கள் எந்த பரிசு பொருட்களையும், மொய்ப்பணம் என எதையும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement