Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு அறிவித்தார் தினேஷ் கார்த்திக்!

09:43 AM May 23, 2024 IST | Web Editor
Advertisement

16 ஆண்டுகளாக ஐபிஎல் தொடர்களில் பங்கேற்று வந்த தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் நேற்று நடைபெற்ற போட்டியுடன் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். தமிழ்நாடு ரஞ்சி கோப்பைக்காக பல ஆண்டுகளாக விளையாடி வரும் அவர், ஐபிஎல் தொடரில் டெல்லி, பஞ்சாப், மும்பை, பெங்களூரு, குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்காக விளையாடி உள்ளார். இதுவரை 257 ஐபிஎல் டி20 போட்டிகளில் விளையாடி 4,842 ரன்களைக் குவித்துள்ளார். 22 அரை சதங்கள் உட்பட அதிகபட்சமாக 97 ரன்கள் குவித்துள்ளார்.

இந்தியாவிற்காக 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,025 ரன்கள் அவர் குவித்துள்ளார். டெஸ்டில் அதிகபட்சமாக 129 ரன்களை விளாசியுள்ள தினேஷ் கார்த்திக், 57 கேட்ச் மற்றும் 6 ஸ்டம்பிங்குகளை செய்துள்ளார். மேலும்,  94 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். 1,852 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 79 ரன்கள் அடித்துள்ளார். 64 கேட்சுகள் மற்றும் 7 ஸ்டம்பிங்குகளை செய்துள்ளார். 56 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 672 ரன்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக 55 ரன்கள் அடித்து உள்ளார்.

இதையும் படியுங்கள் : எமனேசுவரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி திருவிழா – விமரிசையாக நடைபெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்!

2007ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை டி20 போட்டியில் பங்கேற்று கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கமாக இருந்துள்ளார். இந்நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் முன்னதாக அறிவித்திருந்த நிலையில், அவருக்கு சக வீரர்கள் பிரியாவிடை அளித்தனர்.

Tags :
DineshKarthikDKIndianPremierLeagueIPLlPL2024retiredRoyalChallengersBengaluru
Advertisement
Next Article