Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆர்சிபி அணியின் புதிய பேட்டிங் கோச் ஆக தினேஷ் கார்த்திக் நியமனம்!

10:50 AM Jul 01, 2024 IST | Web Editor
Advertisement

2025ம் ஆண்டு ஐபிஎல் அணிக்கான ஆர்சிபி அணியின் புதிய பேட்டிங் கோச் ஆக தினேஷ் கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

ஐபிஎல் 2024 மார்ச் 22ம் தேதி தொடங்கி மே 26ம் தேதி வரை நடைபெற்றது.  ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டில் மே 26 அன்று நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்சிபி அணி இந்த முறையும் கோப்பையை வெல்லவில்லை. ஐபிஎல் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் ஆர்சிபி  2025ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. அதன்படி, புதிய கேப்டன் தேடப்பட்டு வருகிறார் என சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

2025 ஐபிஎல் தொடருக்கு முன்பாக  ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெறும். இருப்பினும், புதிய அணியில் ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் பலர்  நீக்கப்படுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது. விராட் கோலி அணியில் நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. டி20 உலகக் கோப்பை போட்டியின் வெற்றியின் மூலம் அனைத்து டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்திருந்தார்.

தற்போதைய லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் கேப்டனான கே.எல்.ராகுல் பெங்களூரைச் சேர்ந்தவர். இவர் கடந்த காலங்களில் இரண்டு முறை ஆர்சிபி அணிக்காக விளையாடியுள்ளார் ஆனால் அவர் எல்.எஸ்.ஜி அணியில் இருந்து நீக்கப்படுவார் என்று செய்திகள் பரவிய நிலையில் இவர் ஆர்சிபி கேப்டனாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆர்சிபி அணியின் புதிய பேட்டிங் கோச்சாக அந்த அணியின் கடந்த சீசன் முதல் ஓய்வு பெறுவதாக அறிவித்த தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இது ஆர்சிபி அணி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Tags :
Batting CoachDinesh KarthickDKIPLIPL 2025IPL RCBRCB
Advertisement
Next Article