For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ராசிபுரம் ஸ்ரீநித்யசுமங்கலி மாரியம்மன் கோயிலில் தீமிதி விழா!

10:42 AM Nov 09, 2023 IST | Student Reporter
ராசிபுரம் ஸ்ரீநித்யசுமங்கலி மாரியம்மன் கோயிலில் தீமிதி விழா
Advertisement

ராசிபுரம் ஸ்ரீநித்ய சுமங்கலி மாரியம்மன் கோயில் தீமிதி விழாவில், 
திரளான பக்தா்கள் தீ மிதித்து தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்தினா்.

Advertisement

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி
மாரியம்மன் திருக்கோயில் ஐப்பசி திருவிழாவானது தொடா்ந்து ஒரு மாதத்துக்கு
நடைபெறும்.  இதனையடுத்து,  இந்த ஆண்டுக்கான திருவிழா பூச்சாட்டுதலுடன் அக்டோபர் மாதம் 24-ம் தேதி தொடங்கியது.  நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, உற்சவா் சுவாமி திருவீதி உலா அழைத்து வரப்பட்டாா்.  கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 

முக்கிய நிகழ்வுகளான கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல், கொடியேற்றம், பொங்கல் வைத்தல், அம்மை அழைத்தல், அக்கினி குண்டம் பற்ற வைத்தல் போன்றவை நடைபெற்றன.  விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி விழா வியாழக்கிழமை அதிகாலை வெகு விமரிசையாக நடைபெற்றது.  இதனையடுத்து பக்தா்கள் நள்ளிரவு முதலே மஞ்சளாடை அணிந்து, வேப்பிலை ஏந்தி  தங்களது வேண்டுதலை நிறைவேற்ற நீண்ட வரிசையில் காத்திருந்தனா். 

பின்னா் அதிகாலை கோயில் பூசாரி அக்னி குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, தீக்குண்டம் இறங்கியதையடுத்து, தொடா்ந்து பக்தா்கள் பக்தி பரவசத்துடன் தீக்குண்டம் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா். பக்தர்கள் அலகு குத்தியும், அக்கினி சட்டி ஏந்தியும், பெண்கள் கைக்குழந்தைகளுடனும் தீ மிதித்தும் வழிபாடு செய்தனர்.  இதில் ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று தீக்குண்டம் இறங்கினா்.  

Tags :
Advertisement