சொன்னிங்களே செஞ்சிங்களா..? : கடன் சுமையைக் குறைக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டதா? - முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!
தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
”தமிழ்நாட்டின் கடன் சுமையை இறக்கி பொருளாதாரத்தை மேம்படுத்த ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று 2021 தேர்தல் வாக்குறுதி எண் 25-ல் சொன்னீங்களே, செஞ்சீங்களா முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே..?
விளம்பரத்திற்காகப் பெயருக்கு ஒரு குழு அமைத்துவிட்டால் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றியதாகிவிடுமா? குழு அமைக்கும் தமிழகத்தின் கடன் ரூ. 9.29 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதே, இதற்கு என்ன பதில்? கொடுத்த வாக்குறுதியை எப்போதும் காற்றில் பறக்கவிடுவது போல, தாங்கள் அமைத்த குழுவின் பரிந்துரைகளையும் காற்றோடு காற்றாகப் பறக்கவிட்டுவிட்டீர்களா?
ஒட்டுமொத்த அரசு கஜானாவையும் ஊழல் பெருச்சாளிகள் மூலம் சுரண்டித் தின்றுவிட்டு, மீதமிருக்கும் பணத்தை வெற்று விளம்பர படப்பிடிப்புக்காக காலியாக்கிவிட்டு, மக்கள் கேள்வி எழுப்பும்போது மட்டும் "மத்திய அரசு நிதி வழங்கவில்லை" என நீலிக்கண்ணீர் வடித்து மடைமாற்றும்
திமுக அரசை விரைவில் தமிழக மக்கள் வீசியெறிவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.