Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிஜு ஜனதா தளத்தில் பிளவு ஏற்படுத்த முயற்சித்தாரா வி.கே.பாண்டியன்? மவுனத்தை கலைத்த நவீன் பட்நாயக்!

09:40 AM Jul 23, 2024 IST | Web Editor
Advertisement

பிஜு ஜனதா தளத்தில் பிளவு ஏற்படுத்த வி.கே.பாண்டியன்  முயற்சிப்பதாக தகவல் வெளியான நிலையில், ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

Advertisement

ஒடிசாவில் மக்களவைத் தோ்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடந்தது.  இதில் 25 ஆண்டுகளாக ஒடிசா மாநிலத்தை ஆண்டு வந்த நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதளம் கட்சியை,  பாஜக வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றியது.  இதனிடையே பிஜூ ஜனதா தளம் கட்சி தோற்றதற்கு வி.கே.பாண்டியனே காரணம் என்று பலரும் கூறிவந்தனர்.  நவீன் பட்நாயக் வி.கே.பாண்டியனுக்கு ஆதரவாக இருந்த போதிலும் அவர் அரசியலை விட்டு விலகினார்.

இந்த சூழலில், பிஜு ஜனதா தளத்தில் பிளவு ஏற்படுத்த வி.கே.பாண்டியன்  முயற்சிப்பதாகவும், அவரது செயலுக்கு ஆதரவு தெரிவிக்க கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம், நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு பிரதிபலனாக மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத பாஜகவுக்கு ஆதரவளிக்க நவீன் பட்நாயக் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து ஒடிசா முன்னாள் முதலமைச்சர்நவீன் பட்நாயக் தனது எக்ஸ் தள பக்கத்தில் இது குறித்து கூறுகையில், "இந்த செய்தி முற்றிலும் தவறானது, உள்நோக்கம் கொண்டது. நான் ஏற்கெனவே கூறியதுபோல், மாநிலத்துக்கும் கட்சிக்கும் மிகுந்த அா்ப்பணிப்புடனும் நோ்மையுடனும் பாண்டியன் சேவையாற்றியுள்ளாா். அதற்காக அவா் என்றும் மதிக்கப்படுவாா்" என்று தெரிவித்தார்.

மாநிலங்களவையில் ஆதரவளிக்க நவீன் பட்நாயக் உறுதியளித்ததாக வெளியான செய்தியை பாஜகவும் நிராகரித்தது.  இதுதொடா்பாக பாஜக துணைத் தலைவா் பிரஞ்சி நாராயண் திரிபாதி கூறுகையில், "மத்தியிலும், மாநிலத்திலும் பெரும்பான்மை இருப்பதால் பாஜகவுக்கு எந்த கட்சியின் ஆதரவும் தேவையில்லை" என்றாா்.

Tags :
BJPnaveen patnaikodishaVK Pandiyan
Advertisement
Next Article