உருது மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கோரினாரா உத்தவ் தாக்கரே? அவர் கூறியது என்ன?
This news Fact Checked by 'The Quint'
உருது மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கோரியதாக படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
மத்திய அமைச்சரவை சமீபத்தில் மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமிஸ் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்தை வழங்கியது. இதன்மூலம் செம்மொழிகளின் எண்ணிக்கை மொத்தம் 11 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், உருது மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கோரியதாக மேற்கோள் ஒன்று வைரலாகி வருகிறது. வைரலான படத்தின் மேல் வலது மூலையில் ABP Majhaவின் லோகோ இடம்பெற்றுள்ளது (இதே மாதிரியான உரிமைகோரல்களின் காப்பகங்களை இங்கே காணலாம்).
உண்மை சரிபார்ப்பு:
இது உண்மையல்ல, இது போன்ற எந்த அறிக்கையும் அல்லது கோரிக்கையும் தாக்கரேவால் முன்வைக்கப்படவில்லை. ABP Mahja-வால் பகிரப்பட்ட அசல் அட்டைப்படம் உருது மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதாக திருத்தப்பட்டுள்ளது என உண்மை சரிபார்ப்பின்போது கண்டறியப்பட்டுள்ளது.
Google இல் தொடர்புடைய முக்கிய வார்த்தைகள் குறிப்பிட்டு தேடப்பட்டது. ஆனால் இந்தக் கோரிக்கையை ஆதரிக்கும் நம்பகமான அறிக்கை எதுவும் கிடைக்கவில்லை. உத்தவ் தாக்கரேவின் சமூக ஊடக கணக்குகளும் சோதனை செய்யப்பட்டது. ஆனால் அப்படி எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
புதிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்படுவது பற்றிய அறிக்கைகளும் சரிபார்க்கப்பட்டது. அதில் மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமிஸ் மற்றும் பெங்காலி ஆகியவை இடம் பெற்றுள்ளன. ஆனால், அந்த பட்டியலில் உருது இடம் பெறவில்லை.
அசல் படம்:
அடுத்து, ABP Majha-வின் முகநூல் பக்கம் சரிபார்க்கப்பட்டது. ஆனால் உருது மொழியைப் பற்றி உத்தவ் தாக்கரே கூறியதைப் பற்றி எந்த பதிவும் இல்லை. தொடர்ந்து, 2022ம் ஆண்டு செப். 6-ம் தேதி வைரலான படத்தின் வடிவமைப்போடு பொருந்திய பழைய இடுகை கண்டறியப்பட்டது. அந்த பதிவின் மேற்கோள் மராத்தியில், “நேற்று மும்பையில் மங்கள மூர்த்தியையும் 'அமங்கல் மூர்த்தி'யையும் பார்த்தேன். நிலத்தைக் காட்டுவது பற்றி பேசுபவர்களுக்கு வானத்தைக் காட்டு" என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே டெம்ப்ளேட்டைக் கொண்டு மே 18 அன்று ABP Majha-வால் பகிரப்பட்ட மற்றொரு இடுகையின் மேற்கோள் மராத்தியில், “இப்படிப்பட்ட குணமில்லாத, ஊழல்வாதிகள், துரோகிகள் அனைவரையும் கூட்டிச் செல்வதால் அவர்கள் திருப்தியடையவில்லை. அதனால் யாரோ ஒரு கடைசி பெயரை விரும்புகிறார். எனவே அவர் அதை வாடகைக்கு விடுகிறார்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
முடிவு:
உருது மொழிக்கு மராத்தி போன்ற செம்மொழி அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே கோரியதாக திருத்தப்பட்ட படம் பகிரப்படுவது உண்மை சரிபார்ப்பில் கண்டறியப்பட்டது.
Note : This story was originally published by ‘The Quint’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.