Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குடியரசு தின அணிவகுப்பில் திப்பு சுல்தானின் அலங்கார ஊர்தி இடம்பெற்றதா? - உண்மை என்ன?

2025ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பின் போது மைசூரை ஆண்ட திப்பு சுல்தானின் டேபிளோ கர்நாடகா அரசால் கொண்டு செல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் படம் பரவி வருகிறது.
06:55 PM Jan 29, 2025 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by ‘Newsmeter

Advertisement

இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை ஜனவரி 26 அன்று புது டெல்லி மற்றும் நாடு முழுவதும் பிரமாண்டமான கொண்டாடப்பட்டது.  இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மை, இராணுவ வலிமை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக குடியரசுதின விழாவில் பல அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டின் முக்கிய விருந்தினராக இந்தோனேஷிய அதிபர் பிரபுவோ சுபியாந்தோ கலந்து கொண்டார். இந்நிகழ்வில் இந்தியா - இந்தோனேஷியா இடையேயான கலாச்சார பரிமாற்றங்கள் தொடர்பான பல முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிலையில், இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பின் போது மைசூரை ஆண்ட திப்பு சுல்தானின் அலங்கார ஊர்தி கர்நாடகா அரசால் கொண்டு செல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் படம் பரவி வருகிறது.

பேஸ்புக் பயனர் ஒருவர் திப்பு சுல்தான் அலங்கார ஊர்தி இடம்பெற்ற படத்தைப் பகிர்ந்து இவ்வாறு எழுதினார், " இந்துக்களாகிய நீங்கள்  திப்பு சுல்தானை மிகவும் வெறுக்கிறீர்கள், ஆனாலும் நீங்கள் இன்னும் அவரது நினைவாக ஊர்வலம் அணிவகுப்பு நடத்துகிறீர்கள்.  அதனால்தான் நான் சொல்கிறேன், இஸ்லாமியர்களே, உங்களை வெறுப்பவர்கள் கூட உங்களைப் புகழ்ந்து பாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் அளவுக்கு உங்கள் உயரத்தை உயர்த்திக் கொள்ளுங்கள்" என குறிப்பிட்டிருந்தார்.

உண்மை சரிபார்ப்பு : 

திப்பு சுல்தான் தொடர்பாக வைரலாகும் கூற்று தவறாக வழிநடத்துவதாக நியூஸ்மீட்டர் கண்டறிந்துள்ளது. அணிவகுப்பில் வைரலான படம் 2014 இல் இடம்பெற்றிருந்தது என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தியபோது  அதன் முடிவில் ஜனவரி 27, 2014 அன்று, NDTV வெளியிட்ட 'குடியரசு தினத்தில் திப்பு சுல்கான அலங்கார ஊர்தி ட்விட்டரில் பலரால் பேசு பொருளாகியுள்ளது’ என்ற தலைப்பில் இடம்பெற்றிருந்த வீடியோவில் இதே போன்ற படம் காணக்கிடைத்தது.

NDTV செய்தி அறிக்கையின்படி, குடியரசு தின அணிவகுப்புக்கான கர்நாடக அரசின் அலங்கார ஊர்தி திப்பு சுல்தானைச் சேர்த்தது சமூக ஊடகங்களில் தீவிர விவாதத்தைத் தூண்டியது.  இதேபோல ஜனவரி 26, 2014, இந்தியா டுடே அறிக்கையில் 'ட்விட்டரில் டிரெண்டிங் - குடியரசு தின அணிவகுப்பில் கர்நாடகாவின் திப்பு சுல்தான் அலங்கார ஊர்தி ‘ என்ற தலைப்பில் வைரலான படத்தையும் கண்டோம்.

குடியரசு தின அணிவகுப்பில கர்நாடகாவின் அலங்கார ஊர்தி மைசூர் புலி என்று பிரபலமாக அறியப்பட்ட மைசூரின் ஆட்சியாளரான திப்பு சுல்தான் இடம்பெற்றதைத் தொடர்ந்து ட்விட்டரில் ஒரு வார்த்தைப் போர் நடந்ததாக அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

NDTV ன் யூடியூப் பக்கத்தில் 2014 குடியரசு தின அணிவகுப்பின் போது இடம்பெற்ற திப்பு சுல்தானின் அலங்கார ஊர்தி வீடியோவை 200 ஆண்டுகளுக்குப் பிறகு, திப்பு சுல்தானின் கர்நாடகம் அவரது பாரம்பரியத்தைப் பற்றி விவாதிக்கிறது' என்ற தலைப்பில் ஒரு அறிக்கையில் வெளியிடப்பட்டது. கூடுதலாக ஜனவரி 26, 2014 முதல் தூர்தர்ஷன் நேஷனல் யூடியூப் சேனலில் 65வது குடியரசு தின அணிவகுப்பின் நேரடி ஒளிபரப்பு வீடியோவில் இதே அலங்கார ஊர்தியை காணலாம். வீடியோவில் 1:59:32-மணிநேரத்தில் அலங்கார ஊர்தி இடம்பெற்றிருந்தது.

2025 குடியரசு தின அணிவகுப்பில் கர்நாடகாவின் டேபிளோவில் இடம்பெற்றது என்ன?

ஜனவரி 26, 2025 அன்று தி ஹிந்து மற்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட PTI அறிக்கையின்படி 76வது குடியரசு தின அணிவகுப்பில் கர்நாடகாவின் அலங்கார ஊர்தி வரலாற்று நகரமான லக்குண்டியின் முக்கிய கோயில்களைக் காட்சிப்படுத்தியது.

முன் பகுதியில் பிரம்மா ஜினாலயா கோவிலில் இருந்து பிரம்மா சிலை இடம்பெற்றது, லக்குண்டியில் உள்ள மிகப் பழமையான ஜெயின் ஆலயம் மகாவீரருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து கோவிலின் திறந்த தூண் மண்டபம். பிரதான பிரிவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரமாண்டமான மற்றும் அலங்கரிக்கப்பட்ட காசி விஸ்வேஸ்வரா மற்றும் நன்னேஸ்வரா கோயில்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

ஜனவரி 26, 2025 அன்று, பிடிஐ அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ள அதே காட்சிகளைக் காட்டும் கர்நாடகாவின் அலங்கார ஊர்தி வீடியோவை சன்சாத் டிவி வெளியிட்டது

முடிவு :

2025ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பின் போது மைசூரை ஆண்ட திப்பு சுல்தானின் அலங்கார ஊர்தி கர்நாடகா அரசால் கொண்டு செல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் படம் பரவி வருகிறது. நியூஸ் மீட்டரின் ஆய்வில் அவை தற்போதையது அல்ல. 2014ம் ஆண்டு கர்நாடக அரசால் அணிவகுப்பில் இடம்பெற்ற அலங்கார ஊர்தி என்று தெரியவந்துள்ளது. பழைய படங்கள் தற்போதையதை போல தவறான கூற்றுடன் பகிரப்பட்டுள்ளது.

 

Note : This story was originally published by ‘Newsmeter and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
76th Republic DayKarnatakarepublic dayTableutipu sulthan
Advertisement
Next Article