அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியர்களைப் பற்றி தவறாக பேசினாரா ? - வைரல் கூற்றின் பின்னணி என்ன?
This News Fact Checked by ‘ PTI ‘
சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவிய ஒரு வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியர்களைப் பற்றி மோசமான கருத்துக்களைத் தெரிவித்ததாக கூறி சில பயனர்கள் கூறியுள்ளனர். பயனர்களால் பகிரப்பட்ட ஒரு நிமிடம் மற்றும் 47 வினாடிகள் கொண்ட வீடியோவில், அமெரிக்காவில் இந்திய வாடிக்கையாளர் சேவை பிரதிநிதிகளை பணியமர்த்துவதை தடை செய்யும் நிர்வாக உத்தரவு குறித்து அதிபர் டிரம்ப் முதலில் விவாதித்தார்.
பின்னர் "இந்தியர்கள் தங்கள் நாட்டில் குப்பைகளை சுத்தம் செய்யும் வேலைகளைப் பெற வேண்டும் . இது இந்தியாவின் ஒவ்வொரு சதுர மைலிலும் உள்ளது, அவர்களுக்கு அதனைப் பற்றி கவலையில்லை. அவர்கள் தங்கள் ஆறுகளில் நிறைய பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளைக் கொட்டுகிறார்கள்," என்று டொனால் ட்ரம்ப் கூறுகிறார்.
இருப்பினும், பிடிஐ உண்மைச் சரிபார்ப்பு நிறுவனம் தனது விசாரணையில் இந்தக் கூற்று தவறானது என்று கண்டறிந்தது. இந்த வீடியோ முதலில் அரசியல் நையாண்டிகளை செய்யும் உள்ளடக்கத்தை கொண்ட ஒரு யூடியூப் சேனலில் இருந்து எடுக்கப்பட்டது. வைரலான வீடியோவைப் பொறுத்தவரை, அதில் டிரம்ப்பின் குரல் டப் செய்யப்பட்டும் அதில் இடம்பெற்ற காட்சிகள் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
வைரல் கூற்று :
பிப்ரவரி 22 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியர்களைப் பற்றி மோசமான கருத்துக்களைப் பேசுவதாகக் கூறப்படும் ஒரு வீடியோவை ஒரு எக்ஸ் பயனர் பகிர்ந்துள்ளார். ஒரு நிமிடம் மற்றும் 47 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், அமெரிக்காவில் இந்திய வாடிக்கையாளர் சேவை பிரதிநிதிகளை பணியமர்த்துவதைத் தடை செய்யக் கோரும் நிர்வாக உத்தரவு குறித்து அதிபர் டிரம்ப் முதலில் பேசினார். இந்த இடுகைக்கான இணைப்பு மற்றும் காப்பக இணைப்பு, ஒரு ஸ்கிரீன்ஷாட்டுடன்:
உண்மை சரிபார்ப்பு :
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ குறித்து பிடிஐ டெஸ்க் இன்விட் கருவி மூலம் வைரலான வீடியோவை இயக்கி, பல கீஃப்ரேம்களைப் பிரித்தெடுத்தது. கூகுள் லென்ஸ் மூலம் கீஃப்ரேம்களில் ஒன்றை இயக்கியபோது, பல பயனர்கள் இதே போன்ற கூற்றுகளுடன் அதே வீடியோவைப் பகிர்ந்துள்ளதை டெஸ்க் கண்டறிந்தது.
அத்தகைய இரண்டு இடுகைகளை இங்கே மற்றும் இங்கே காணலாம் , அவற்றின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்புகளை இங்கே மற்றும் இங்கே காணலாம் :
அதிபர் டிரம்ப் நிர்வாக உத்தரவை அறிவிக்கும் வைரலான வீடியோவை டெஸ்க் கவனமாக ஆராய்ந்தபோது, அந்த வீடியோவில் பல முரண்பாடுகள் இருப்பதைக் கண்டறிந்தது. வீடியோவை ஆராய்ந்தபோது, அது 'ஃபாக்ஸ் நியூஸ்' என்ற பதாகையின் கீழ் பகிரப்பட்டிருப்பதை டெஸ்க் கவனித்தது - இது அமெரிக்காவை தளமாகக் கொண்ட செய்தி சேனலான ஃபாக்ஸ் நியூஸின் நையாண்டி செய்யும் நிகழ்ச்சியாகும் என்று தெரியவந்துள்ளது. கூடுதலாக, டெஸ்க் டிக்கருக்கு சற்று மேலே ‘சாப்டான கிண்டல்' என்ற வாசகம் குறிப்பிடப்பட்டிருப்பதைக் கண்டது.
கீழே உள்ள ஒரு ஸ்கிரீன்ஷாட் அதையே எடுத்துக்காட்டுகிறது:
'Sobering Satire' என்ற வார்த்தைக்கான முக்கிய வார்த்தை தேடலை டெஸ்க் நடத்தியபோது, அதே பெயரில் ஒரு YouTube சேனலைக் கண்டறிந்தது. சேனல் விளக்கத்தில் இது அரசியல் நையாண்டிகளை செய்யும் தளம் என்று கூறுகிறது: சேனலுக்கான இணைப்பு , ஸ்கிரீன்ஷாட்டுடன் இங்கே :
டெஸ்க் தனது விசாரணையைத் தொடர்ந்தபோது, யூடியூப் சேனலை ஸ்கேன் செய்து, ஜனவரி 25, 2025 அன்று சேனலால் வெளியிடப்பட்ட வைரல் பதிவிலிருந்து அதே வீடியோவைக் கண்டறிந்தது. வீடியோ விளக்கம் அதை நையாண்டி என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளது:
வீடியோவுக்கான இணைப்பு , ஸ்கிரீன்ஷாட்டுடன் இங்கே :
வைரல் பதிவில் காணப்பட்ட வீடியோ ஜனவரி 2025 இல் யூடியூப் சேனலால் பகிரப்பட்ட வீடியோவுடன் பொருந்துகிறது என்பதை எடுத்துக்காட்டும் ஒப்பீட்டு படம் கீழே உள்ளது:
டிரம்பின் குரல் தோற்றத்திற்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள கிளைவ் என்ற வார்த்தையுடன் தொடர்புடைய ஒரு வலைத்தளத்தையும் (www.michaelclive.com) தி டெஸ்க் குறிப்பிட்டுள்ளது. வலைத்தளத்தை ஸ்கேன் செய்தபோது, அதிபர் டிரம்பின் குரலைப் போல பலமுறை குரல் பதிவை டப் செய்யும் பலகுரல் நடிகரும் நகைச்சுவை நடிகருமான மைக்கேல் கிளைவ் உடன் தொடர்புடையதாக டெஸ்க் கண்டறிந்தது. அவரது வலைத்தளத்தில் உள்ள பல வீடியோக்களிலும் அவர் டிரம்பைப் போல குரலில் பேசுவதும் இடம்பெற்றுள்ளது.
வைரல் வீடியோவில் உள்ள ஆடியோ மைக்கேல் கிளைவ் உடன் நேரடியாக இணைக்கப்பட்டதா என்பதை டெஸ்க் சுயாதீனமாக சரிபார்க்க முடியாவிட்டாலும், யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட விவரங்கள் இந்த தொடர்பை வலுவாகக் காட்டுகின்றன. விசாரணையின் அடுத்த பகுதியில், வைரலான வீடியோவில் டிரம்பின் காட்சிகள் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க, டெஸ்க் கூகுள் லென்ஸ் மூலம் கீஃப்ரேம்களை இயக்கியது.
நையாண்டி வீடியோவில் பயன்படுத்தப்படும் அசல் காட்சிகள் கடந்த மாத தொடக்கத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பகிர்ந்து கொண்டது என்பதைக் கண்டறிந்தது. மார்-எ-லாகோவில் ஆளுநர்களுக்கான இரவு விருந்தில் டிரம்ப் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது இந்த அசல் நிகழ்வு நிகழ்ந்தது. இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, டிரம்ப் இந்தியர்களைப் பற்றி குறிப்பிடவில்லை அல்லது "புதிய வாடிக்கையாளர் சேவை மசோதா" தொடர்பான எந்த நிர்வாக உத்தரவையும் விவாதிக்கவில்லை.
வைரல் பதிவின் காட்சிகளுடன் பொருந்தக்கூடிய ஹிந்துஸ்தான் டைம்ஸின் வீடியோவின் இணைப்பு இங்கே :
எனவே இந்த வைரல் வீடியோ அரசியல் நையாண்டியில் நிபுணத்துவம் பெற்ற ஒரு யூடியூப் சேனலான சோபரிங் சட்டையர் என்னும் சேனலில் உருவாக்கப்பட்ட வீடியோ என டெஸ்க் முடிவு செய்தது. இந்த காணொளியில் டிரம்பை போன்று குரல் மாற்றம் செய்பவரின் குரல் இடம்பெற்றிருப்பதும் காட்சிகளை டிஜிட்டல் முறையில் மாற்ற செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டதாகவும் வெளிப்படையாகக் தெரிகிறது
Note : This story was originally published by ‘ PTI ‘ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.