For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விராட் கோலியின் பவுண்ட்ரியை தடுக்க முயன்றபோது பாக். வீரரின் கால்சட்டை கழன்று விழுந்ததா? - வைரல் வீடியோ உண்மையா?

விராட் கோலியின் பவுண்ட்ரியை தடுக்க முனைந்த பாகிஸ்தான் பீல்டரின் கால் சட்டை கழன்று விழுந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது
03:34 PM Mar 03, 2025 IST | Web Editor
விராட் கோலியின் பவுண்ட்ரியை தடுக்க முயன்றபோது பாக்  வீரரின் கால்சட்டை கழன்று விழுந்ததா    வைரல் வீடியோ உண்மையா
Advertisement

This News Fact Checked by ‘Newsmeter

Advertisement

பிப்ரவரி 23 அன்று துபாயில் பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், விராட் கோலியின் சிறப்பான ஆட்டம் இந்திய அணியின்  வெற்றிக்கு வித்திட்டது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்து 241 என்ற இலக்கை அடைய பங்களித்தார். இதன் மூலம் இந்திய அணி  ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றிக்கு இரண்டு ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், கோலி ஒரு பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்து தனது சதத்தையும் அசத்தலாக பூர்த்தி செய்தார்.  இந்த நிலையில்  போட்டியின் போது நடந்ததாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ கிளிப்களில்,  கேப்டன் ரோஹித் சர்மா, ஸ்டேண்டிலிருந்து விராட் கோலியை பவுண்டரியுடன் தனது சதத்தை முடிக்க சைகை செய்வதைக் காட்டுகிறது, மற்றொரு காட்சியில்  பாகிஸ்தான் பீல்டர்  பந்தை தடுத்த நிறுத்த கீழே விழும்போது எதிர்பாராத விதமாக அவரது பேண்ட் கழன்று உள்ளாடை வெளியே தெரிகிறது. இதனைத் தொடர்ந்து ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கோலியை பாராட்டும் விதமாக  கைதட்டும் வீடியோவுடன் இந்த வீடியோ முடிகிறது.

இந்த வீடியோவை பகிர்ந்த ஒரு X பயனர், "விராட் கோலியின் கடைசி ஷாட் பாகிஸ்தான் பீல்டரின் பேண்ட் கழன்றது. கவனமாகப் பாருங்கள்" என்ற தலைப்பில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

உண்மை சரிபார்ப்பு :

சமூக வலைதளங்களில் வைரலான இந்த கூற்று தவறானது என்று நியூஸ்மீட்டர் கண்டறிந்துள்ளது. பாகிஸ்தான்  ஃபீல்டர் தனது ஃபீல்டிங்கின்போது எதிர்பாராதவிதமாக பேண்ட் கழன்ற வீடியோ நவம்பர் 2024 ஆம் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடந்த வேறு ஒரு போட்டியிலிருந்து எடுக்கப்பட்டது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

வைரல் வீடியோவில், ஒவ்வொரு கிளிப்பிலும் பாகிஸ்தான் வீரர்களின் ஜெர்சிகள் வித்தியாசமாக இருப்பதைக் கவனித்தோம் - முதல் கிளிப்பில் பந்து வீச்சாளர் வெளிர் பச்சை நிறத்தில் இடம்பெற்றிருந்தார், இரண்டாவது கிளிப்பில் ஃபீல்டர்கள் அடர் பச்சை நிறத்தில் இருந்தனர். இந்த முரண்பாடு, பிப்ரவரி 23 அன்று துபாயில் நடைபெற்ற போட்டியிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளா என்கிற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து முக்கிய வார்த்தை தேடலில் ஈடுபட்டபோது  பிப்ரவரி 23 அன்று ஐசிசியின் பேஸ்புக் கணக்கில் வெளியிடப்பட்ட விராட் கோலியின் சதத்ததோ போட்டியை வெல்லும் வீடியோவை கண்டறிந்தோம். இந்த வீடியோவில் வைரலான காட்சியில் காணப்படுவது போன்ற எந்த ஃபீல்டிங் முயற்சியும் இல்லை.

கூடுதலாக, ஸ்ட்ரீமிங் தளமான ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்ட இரண்டு நிமிட வீடியோவை நாங்கள் மதிப்பாய்வு செய்தோம் இந்த வீடியோவில் வைரலான காட்சிகளில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான காட்சிகளை காணமுடியவில்லை.
கீஃப்ரேம்களை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் மேற்கொண்டபோது, ​​நவம்பர் 18, 2024 அன்று பாகிஸ்தான் வீரர் ஜனாதத் கான் பீல்டிங்கின்போது கால் சட்டை கழன்று விழுந்தது என்கிற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு செய்தி அறிக்கையை கண்டோம்.

அந்த அறிக்கையின்படி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி201 இல் அறிமுகமான பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஜஹாந்தாத் கான், பந்தை எல்லையை அடைவதைத் தடுக்க முயன்று விழுந்ததில் அவரது கால் சட்டை கழன்றது என இடம்பெற்றிருந்தது.

இந்த அறிக்கையில் நவம்பர் 18, 2024 அன்று Cricket.com.au வெளியிட்ட கிளிப்பின் நீண்ட பதிப்பும் அடங்கும். ஷஹீன் அப்ரிடி வீசிய பந்தினை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் அதிரடியாக அடித்தபோது அதனை பவுண்டிரிக்கு செல்லாமல் தடுக்க ஜஹாந்தத் கான் முயன்றார். அப்போது அவரது கால்சட்டை எதிர்பாராத விதமாக நழுவிச் சென்றது.

எனவே, பாகிஸ்தான் வீரரின் கால் சட்டை கழன்ற வீடியோ பிப்ரவரி 23 அன்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது எடுக்கப்பட்டது அல்ல மாறாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின்போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. எனவே இந்தக் கூற்று தவறானது.

Note : This story was originally published by ‘Newsmeter’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement