Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குஜராத்தின் முன்னேற்றத்திற்காக மஹாயுதி கூட்டணி வாக்கு கேட்டதா? - பரவும் #ViralImage உண்மை என்ன?

03:36 PM Nov 11, 2024 IST | Web Editor
Advertisement

This news Fact Checked by The Quint

Advertisement

குஜராத் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக  மஹாயுதி கூட்டணிக்கு வாக்களியுங்கள் என சமூக வலைதளங்களில் போஸ்டர் வைரலானது. மகாராஷ்டிரா மாநில பாஜக வெளியிட்டுள்ளதாக பரப்பப்பட்ட இந்த போஸ்டரின் உண்மைத் தன்மை குறித்து விரிவாக காணலாம்

மகாராஷ்டிராவில் வருகிற நவம்பர் 20ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பாஜக – ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைந்து மகாயுதி எனும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. மறுபுறம் எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே அணி சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசின் ஒன்றிணைந்து மகா விகாஸ் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன.

தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில் குஜராத் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக மஹாயுதி கூட்டணிக்கு வாக்களியுங்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மராத்தி மொழியில் வெளியான இப்போஸ்டர் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு விமர்சனத்திற்குள்ளானது.

மஹாயுதி பெயரில் பரப்பப்பட்ட போஸ்டர் - உண்மை என்ன?

”குஜராத்தை முன்னேற்ற மஹாயுதிக்கு வாக்களியுங்கள்” என பரவும் இந்த போஸ்டரை கூர்ந்து கவனித்தால் அதில் உள்ள குஜராத் எனும் பகுதி மார்ஃபிங் செய்யப்பட்டுள்ளதை தெளிவாக காண முடியும். மேலும் இதனை ஆய்வுக்குட்படுத்திய தி குயிண்ட் நிறுவனத்தின் வெப்கூஃப் இந்த போஸ்டரை ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தியது. இந்த தேடலின் முடிவில் அசல் போஸ்டர் நவம்பர் 3 அன்று 'பிரவின் பானுஷாலி' என்ற X பயனரின் பதிவில் பதிவேற்றப்பட்ட போஸ்டர் கிடைக்கப் பெற்றது.

பிரவீன் பானுஷாலி என்பவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பகுதியில் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் (பிஜேஒய்எம்) பொதுச் செயலாளர் என்று அடையாளம் என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் மகாராஷ்டிராவின் முன்னேற்றத்துக்காக கூட்டணி கட்சியிக்கு வாக்களியுங்கள் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவில் இடம்பெற்ற போஸ்டரை மார்பிங் செய்து அதனை குஜராத் என மாற்றி போலியாக பரப்பப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

https://twitter.com/BjpPravin1/status/1853014818820689972

முடிவு :

குஜராத் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக  மஹாயுதி கூட்டணிக்கு வாக்களியுங்கள் என சமூக வலைதளங்களில் வைரலாகும் போஸ்டர் உண்மை சரிபார்ப்பில் போலியானது என நிரூபணமாகியுள்ளது

Note : This story was originally published by ‘The Quint’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
assembly electionBJPFact Checkfake newsMaha YutiMaharastra ElectionMAHAYUTHINCP
Advertisement
Next Article