தேசத்தந்தை காந்தியின் தனிப்பட்ட செலவிற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் மாதம் ரூ.100 வழங்கியதா?
This News Fact Checked by ‘FACTLY’
தேசத்தந்தை காந்தியின் தனிப்பட்ட செலவுக்காக 1930 முதல் பிரிட்டிஷ் அரசாங்கம் ரூ.100 வழங்கியதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
"தேசிய தொல்லியல் அருங்காட்சியகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட ஆவணத்தின்படி, பிரிட்டிஷ் அரசாங்கம் 1930 முதல் காந்தியின் தனிப்பட்ட செலவுகளுக்காக ஒவ்வொரு மாதமும் ரூ.100 செலுத்தியது" என்று கூறும் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது (இங்கே, இங்கே, இங்கே). இந்த பதிவை ஆதரிக்க ஒரு பழங்கால ஆவணம் ஒன்றும் பகிரப்படுகிறது.
இந்த பதிவின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
ட்விட்டர் வைரல் பதிவில் குறிப்பிட்டது போல காந்தி பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து மாதம் 100 ரூபாய் உதவித்தொகை பெற்றாரா? 1827-ம் ஆண்டின் பம்பாய் ஒழுங்குமுறை Xxv இன் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட எம்.கே.காந்தியின் சிகிச்சை தொடர்பான ஆவணங்கள், தேசிய ஆவணக் காப்பக இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஆவணம் உள்ளிட்டவை தொடர்பான முக்கிய வார்த்தைகளை பயன்படுத்தி இணையத்தில் தேடப்பட்டது. அப்போது, “1827 ஆம் ஆண்டின் பம்பாய் ஒழுங்குமுறை Xxv இன் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எம்.கே.காந்தியின் சிகிச்சை காங்கிரஸ் சார்பில் மாநில கைதிக்கு ரூ.100 கொடுப்பனவுக்காகச் செய்யப்பட்ட ஆவணங்கள்” (காப்பகப்படுத்தப்பட்டது).
இந்த வைரல் பதிவில் உள்ள ஆவணத்தை இந்திய கலாச்சாரத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் (இந்திய தேசிய ஆவணக்காப்பகம்) பக்கம் 51 இல் காணலாம்.
காந்தி எந்த நேரடி உதவித்தொகையையும் பெறவில்லை:
பம்பாய் அரசின் உள்துறை செயலாளராக இருந்த ஜிஎஃப்எஸ் காலின்ஸ், இந்திய அரசின் உள்துறை செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதத்தில் காலின்ஸ், “எர்வாடா மத்திய சிறையில் அரசு கைதியாக அடைக்கப்பட்டிருந்த எம்.கே.காந்தியின் பராமரிப்புக்காக 100 ரூபாய் அங்கீகரிக்கப்பட்டது. மேலும் இந்தத் தொகையானது '29-அரசியல் மத்திய அகதிகள் மற்றும் மாநிலக் கைதிகள்- பிற அகதிகள் மற்றும் மாநிலம்' என்ற தலைப்பின் கீழ் இந்திய அரசுக்குப் பற்று வைக்கப்பட்டது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது எம்.கே.காந்தியின் பராமரிப்புக்காக இந்த தொகை சிறைத்துறைக்கு வழங்கப்பட்டது. மேலும், காந்திக்கு நேரடியாகத் தொகை வழங்கப்படவில்லை.
அரச கைதிகளாக இருப்பவர்களின் பராமரிப்புக்காக நிதி ஒதுக்கீடு செய்வதற்கு ஆங்கிலேயர்களுக்கு பொதுவான நடைமுறை உள்ளது:
1818-ம் ஆண்டின் வங்க மாநில கைதிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், ஆங்கிலேயர் ஆட்சியின் போது காவலில் உள்ள முக்கியமான மாநில கைதிகளுக்கு அரசாங்கம் கொடுப்பனவுகளை வழங்குவது பொதுவான நடைமுறையாகும். வைரலான பதிவில் உள்ள கடிதத்தில் காந்தியை அரசு கைதி என்று குறிப்பிடுவதால், சிறையில் காந்தியின் பராமரிப்புக்காக அவருக்கு உதவித்தொகையாக ரூ.100 இந்திய அரசின் கணக்கில் இருந்து '29-அரசியல் மத்திய அகதிகள் மற்றும் மாநில கைதிகள்- பிற அகதிகள் மற்றும் மாநில கைதிகள்' என்ற தலைப்பில் எடுக்கப்பட்டது. அப்போது நடைமுறையில் இருந்த (இங்கே) சட்டங்களின்படி காந்தி இந்த உதவித்தொகையைப் பெற்றார் என்பது தெளிவாகிறது.
பல கைதிகளும் இதே போன்ற கொடுப்பனவுகளைப் பெற்றனர்:
பல அரசியல் கைதிகள் மற்றும் புரட்சியாளர்கள் சிறையில் இருந்தபோது அத்தகைய கொடுப்பனவுகளைப் பெற்றனர். இருப்பினும், அரசு அதிகாரிகளின் விருப்பப்படி அவர்களுக்கு ஒதுக்கப்படும் கொடுப்பனவு அளவு மாறுபடும். மேலும், வைரலான பதிவில் உள்ள கடிதத்தை கூர்ந்து கவனித்தால், வங்க தேசத்தை சேர்ந்த சதீஷ் சந்திர பக்ராஷி என்ற அரசு கைதிக்கும் உதவித்தொகையாக ரூ.100 பராமரிப்புக்காக தொகை வழங்கப்பட்டது.
மாண்டலே சிறையில் இருந்து பல மாநில கைதிகள் தங்களுக்கு 1818 சட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கோரிய (காப்பகப்படுத்தப்பட்ட) மனுக்களை இந்திய கலாச்சார இணையதளத்தில் (இங்கே) பார்க்கலாம். இதிலிருந்து, காந்திக்கு மட்டுமின்றி மற்ற தனி நபர்களுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் இத்தகைய உதவித்தொகையை வழங்கியது என்ற முடிவுக்கு வரலாம்.
உதவித்தொகையை ஏற்க காந்தி மறுத்தார்.
1930-ம் ஆண்டு மே 10-ம் தேதி, காந்தி எர்வாடா சிறையிலிருந்து பம்பாய் பிரசிடென்சிக்கான சிறைகளின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் EE டாய்லுக்கு ஒரு கடிதம் எழுதினார் (காப்பகம்). அதில் தனது பராமரிப்புக்கு அத்தகைய பட்ஜெட் தேவையில்லை என்று காந்தி குறிப்பிட்டிருந்தார். காந்தி தனது மாதாந்திர உதவித்தொகையை ஏற்க மறுத்ததை இது குறிக்கிறது. இந்த கடிதத்தில் மகாத்மா காந்தி, “அரசு எனக்கு மாத உதவித்தொகையாக ரூ.100. அதற்கு மேல் எனக்கு எதுவும் தேவையில்லை என்று நம்புகிறேன். எனது உணவு மிகவும் விலை உயர்ந்தது என்பது எனக்குத் தெரியும். இது என்னை வருத்தப்படுத்துகிறது, ஆனால் அது எனக்கு ஒரு பொருள் தேவையாகிவிட்டது.” (ஆங்கிலத்திலிருந்து தெலுங்கிற்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது).
முடிவு:
இறுதியாக, தனிப்பட்ட முறையில் மாத உதவித்தொகையாக பிரிட்டிஷ் அரசிடமிருந்து காந்திக்கு ரூ.100 வழங்கப்படவில்லை எனவும், பிரிட்டிஷ் அரசாங்கம் ரூ.100 சிறைத்துறை பராமரிப்புக்காக எரவாடா மத்திய சிறையில் அரசு கைதியாக அடைக்கப்பட்ட காந்திக்கு வழங்கப்பட்டது என உறுதி செய்யப்பட்டது.
Note : This story was originally published by ‘FACTLY’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.