For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புஷ்பா 2 Premier Showல் கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவன் உயிரிழப்பா? - வைரலாகும் பதிவு | உண்மை என்ன?

07:58 AM Dec 17, 2024 IST | Web Editor
புஷ்பா 2 premier showல் கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவன் உயிரிழப்பா    வைரலாகும் பதிவு   உண்மை என்ன
Advertisement

This news Fact Checked by Newsmeter

Advertisement

புஷ்பா 2 பிரீமியர் காட்சியை காணச் சென்ற தாய் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்த நிலையில் காயமடைந்த சிறுவனும் தற்போது உயிரோடு இல்லை என சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலானது. இதுகுறித்து உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்தின் பிரீமியர் காட்சி வெளியான நாள் பெரும் சோகத்தில் முடிந்தது. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார் மற்றும் அவரது எட்டு வயது மகன் ஸ்ரீ தேஜா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி மயக்கமடைந்த சிறுவனுக்கு காவல் துறையினர் முதலுதவி அளித்தனர். அந்தச் சம்பவத்தின் வீடியோ வைரலானது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த வீடியோவை பகிர்ந்த சிலர் , சிறுவன் உயிரிழந்ததாக பதிவிட்டு வந்தனர்.

அந்த இடுகையில் 'இதயத்தை உடைக்கச் செய்கிறது. சந்தியா திரையரங்கில் வெளியான புஷ்பா திரைப்படத்தின் பிரீமியர் ஷோவில் காயம் அடைந்த சிறுவன் உயிரிழந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. சிறுவயதிலேயே அவன் இவ்வுலகை விட்டுப் பிரிந்துவிட்டான். அச்சிறுவனின் ஆன்மா சாந்தியடையட்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மை சரிபார்ப்பு :

சமூக வலைதளங்களில் பரவிய செய்தி குறித்து ஆய்வு செய்த நியூஸ்மீட்டர் இந்த கூற்றுகள் தவறானவை என்று கண்டறிந்தது. ஹைதராபாத்தில் கிம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ அறிக்கையின்படி, காவல்துறையின் சிபிஆர் பரிசோதனைக்கு பின்னர் சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அவரது உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவ அறிக்கையின்படி சிறுவன் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நேரத்தில் ஓரளவு சுயநினைவுடன் இருந்தான். சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டிருந்தது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சிறுவனின் உணர்திறன் பலவீனமாக உள்ளதாகவும் , உடல்நிலை இன்னும் கவலைக்கிடமாக உள்ளதால், அவர் தற்போது மருத்துவக குழுவின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் புஷ்பா-2 திரையிடலில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் மரணம் , சிறுவன் காயம் என்ற தலைப்பில் சமீபத்தில் தி ஹிந்து கட்டுரை வெளியிட்டது. நடிகர் அல்லு அரஜுன் மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் சந்தியா திரையரங்கில் 'புஷ்பா 2: தி ரூல்" படத்தின் பிரீமியர் காட்சிக்காக திரையரங்கிற்கு வந்தனர் என்று கட்டுரை எழுதப்பட்டது.

"இரண்டு மணி நேரத்திற்கு முன்பு வரை அவர்களின் வருகை பற்றி எந்த தகவலும் இல்லை எனவே முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. அல்லு அர்ஜுன் தியேட்டரை விட்டு வெளியேறும் போது அவரைப் பார்க்க ஏராளமானோர் கூடினர். இதனால் நெரிசல் ஏற்பட்டது" என்று சிக்கடப்பள்ளி காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தி இந்து கட்டுரையின்படி, நிரம்பியிருந்த திரையரங்கில் மூச்சுவிட சிரமப்பட்டதால் மக்கள் வெளியே வந்ததாக சிக்கடப்பள்ளி ஏசிபி ரமேஷ் குமார் தெரிவித்தார். இந்த நிலையில் நெரிசலில் சிக்கி எட்டு வயது சிறுவனும் அவரது தாயும் சிக்கியதாக அறிந்தோம் என்றும் "சிபிஆர் மூலம் அவர்களுக்கு யாரும் உதவவில்லை. இதனால் அந்த பெண் மூச்சுத்திணறலால் இறந்தார்" என்று ஒரு போலீஸ் அதிகாரி சொன்னதாக மேற்கோள் காட்டி தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இதேபோல இச்சம்பவம் குறித்து என்டிடிவி " ஹைதராபாத்தில் புஷ்பா 2 பார்க்க விரும்பிய பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலி" என்ற தலைப்பில் செய்தி அறிக்கை வெளியிட்டது. இந்த தம்பதியருக்கு ஏழு வயது மகளும் உள்ளார். அவர் கூட்ட நெரிசலில் காயமடைந்தார் என்று என்டிடிவி எழுதியது. நியூஸ்மீட்டர் இந்தக் கதையை வெளியிட்ட நேரத்தில் சிறுவனின் நிலை மோசமாக இருந்தது.

முடிவு:

புஷ்பா 2 பிரீமியர் காட்சியை காணச் சென்ற தாய் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்த நிலையில் காயமடைந்த சிறுவனும் தற்போது உயிரோடு இல்லை என சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலானது. இவை தவறானவை. சிறுவன் மருத்துவ கண்காணிப்பில் உள்ளான், அவனது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Note : This story was originally published by Newsmeter and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement