பாஜக 130-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதா? உண்மை என்ன?
This news fact checked by Newschecker
மக்களவைத் தேர்தலில் பாஜக 30 இடங்களில் 500க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலும், 100 தொகுதிகளில் 1,000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றதாக பகிரப்படும் பதிவு பொய்யானது என கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டன. இத்தேர்தலில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும், அதிமுக – தேமுதிக அணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.
இந்நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக 30 இடங்களில் 500க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலும், 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 1,000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றதாக பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்த உண்மையை கண்டறிய Newscheckers சார்பில் முடிவு செய்யப்பட்டது.
உண்மை சரிபார்ப்பு:
இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள தரவுகளை கவனமாக ஆய்வு செய்ததில், மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் 1,587 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது கண்டறியப்பட்டது. ஒடிசாவின் ஜாஜ்பூர் தொகுதியைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் ரவீந்திர நாராயண் பெஹரா 5,34,239 வாக்குகள் பெற்று, பிஜேடியின் சர்மிஸ்தா சேத்தியை (5,32,652) 1,587 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
முடிவு:
எனவே, பாஜக 500 வாக்கு வித்தியாசத்தில் 30 இடங்களிலும், 1000 வாக்குகள் வித்தியாசத்தில் 100 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது என்ற வைரலான கூற்று புனையப்பட்டது.
Note : This story was originally published by Newschecker and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.