நாட்டின் பொருளாதாரம் குறித்த ரகசிய தகவலை ஸ்ரேயா கோஷல் கசியவிட்டாரா? - வைரல் பதிவு உண்மையா?
பாடகி ஸ்ரேயா கோஷல் நாட்டின் பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறும் ஒரு ஸ்கிரீன் ஷாட்டை பல சமூக ஊடக பயனர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
02:55 PM Mar 04, 2025 IST | Web Editor
Advertisement
This News Fact Checked by ‘ PTI ‘
Advertisement
பிரபல பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல் ஒரு நேர்காணலின் போது நாட்டின் பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறும் ஒரு முன்னணி ஆங்கில செய்தி கட்டுரையின் ஸ்கிரீன் ஷாட்டை பல சமூக ஊடக பயனர்கள் பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்த உண்மைத் தன்மைய அறிய டெஸ்க் முடிவு செய்தது. இதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் வைரலான ஸ்கிரீன் ஷாட் போலியானது என்றும், ஆங்கில நாளிதழ் அத்தகைய கட்டுரை எதையும் வெளியிடவில்லை என்றும் கண்டறிந்தது.
வைரல் கூற்று :
பிப்ரவரி 24 அன்று, ஒரு எக்ஸ் பயனர் தி இந்தியன் எக்ஸ்பிரஸில் பத்திரிகையில் வெளியானதாக கூறப்படும் கட்டுரையின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்தார். அதில் சர்ச்சைக்குரிய நேர்காணலுக்குப் பிறகு ரசிகர்கள் ஸ்ரேயா கோஷலின் குறித்து எதிர்வினையாற்றியதாக தெரிவித்திருந்தார். “தேசம் எதிர்வினையாற்றுகிறது - இதைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?” என அவர் குறிப்பிட்டார். வைரல் இடுகைக்கான இணைப்பு மற்றும் காப்பக இணைப்பு இங்கே , கொடுக்கப்படுள்ளது. மேலும் அதன் ஸ்கிரீன்ஷாட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
உண்மை சரிபார்ப்பு :
வைரலான பதில் இடம்பெற்ற படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலின் மூலம் டெஸ்க் இயக்கி தேடியதில் இதேபோன்ற கூற்றுடன் பல பயனர்கள் அதே இடுகையைப் பகிர்ந்துள்ளதைக் கண்டறிந்தது. அத்தகைய ஒரு இடுகையை இங்கே காணலாம் , அதன் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம் .
இதனைத் தொடர்ந்து டெஸ்க் கூகுளில் தனிப்பயனாக்கப்பட்ட முக்கிய வார்த்தை தேடலை நடத்தியது. அதில் தி இந்தியன் எக்ஸ்பிரஸின் அத்தகைய அறிக்கையை கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும், வைரல் இடுகையில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்தபோது, பல முரண்பாடுகளைக் கண்டறிந்தோம் - கட்டுரையில் வெளியீட்டு தேதி இல்லை, மேலும் மற்ற ஹைப்பர்லிங்க்குகள், கிளிக் செய்தபோது, எங்களை இம்மீடியட் ஃபாஸ்ட்க்ஸ்™க்கு அழைத்துச் சென்றன. மேலும் முக்கிய இணைப்பில் 'https://innews.fixedsight.mom/' என்று எழுதப்பட்டிருந்தது. கீழே உள்ள ஸ்கிரீன்ஷாட் அதையே எடுத்துக்காட்டுகிறது.
நாட்டின் பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் ரகசிய தகவல்களை கசியவிட்டதாக ஸ்ரேயா கோஷல் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதால் ரசிகர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதாக கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
""மிர்ச்சி பிளஸ்" நிகழ்ச்சி ஒளிபரப்பின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது, அப்போது ஸ்ரேயா கோஷல் தற்செயலாக கூடுதல் வருமானம் தொடர்பான ஆதாரத்தை வெளிப்படுத்தினார். இந்த வருமானம் சட்டப்பூர்வமானது என்றாலும், இந்த தகவலை வெளியிடுவது வருமான ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்துவதன் மூலம் பெருமளவிலான பணிநீக்கங்களுக்கு வழிவகுக்கும் என்று அதிகாரிகள் கவலை கொண்டுள்ளனர்" என்று அறிக்கையின் ஒரு பகுதி கூறுகிறது.
விசாரணையின் அடுத்த பகுதியில், மிர்ச்சி பிளஸின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இடம்பெற்ற முழு நேர்காணலையும் டெஸ்க் ஆராய்ந்தது; இருப்பினும், அது போன்ற எந்த உரையாடலையும் காணவில்லை.
விசாரணையின் அடுத்த பகுதியில், தெளிவுபடுத்தலுக்காக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுவைத் தொடர்பு கொண்டோம். அதற்கு பதிலளித்த குழு, இந்த இணையப் பக்கங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸின் பக்கங்களைப் போலவே தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும், தவறாக வழிநடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும், வாசகர்களை எச்சரித்து வருவதாகவும் எங்களிடம் கூறினர்.
போலி வலைப்பக்கங்கள் குறித்து வாசகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட கட்டுரைக்கான இணைப்பு இங்கே உள்ளது
எனவே வைரலான ஸ்கிரீன் ஷாட் போலியானது என்றும், ஸ்ரேயா கோஷால் அத்தகைய அறிக்கையை வெளியிடவில்லை என்றும் டெஸ்க் முடிவு செய்தது.
Note : This story was originally published by ‘ PTI ‘ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.