உத்தவ் தாக்கரேயை 'முஸ்லீம் இதயங்களின் ராஜா' என்று சஞ்சய் ராவத் அழைத்தாரா? - The Quint கூறுவது என்ன?
This news Fact Checked by The Quint
உத்தவ் தாக்கரேயை 'முஸ்லீம் இதயங்களின் ராஜா' என்று சஞ்சய் ராவத் அழைத்ததாக சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த செய்தியின் உண்மைத் தன்மை குறித்து விரிவாக காணலாம்.
மகாராஷ்டிராவில் இன்று (நவ.20) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. பாஜக – ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைந்து மகாயுதி எனும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. மறுபுறம் எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே அணி சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசின் ஒன்றிணைந்து மகா விகாஸ் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன.
மகராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் ஒருபகுதியாக ஏராளமான பொய்ச் செய்திகள் பரவின. அதன் ஒரு பகுதியாக சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாகக் கூறப்படும் ஒரு மராத்தி மேற்கோள் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி பரவியது. அதில், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை 'முஸ்லிம் இதயங்களில் ராஜாவாக இருப்பவர் என்று சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளதாக
இந்த மேற்கோளானது லோக்மத் பத்திரிகையின் லோகோ மற்றும் டெம்ப்ளேட்டுடன் பகிரப்பட்டுள்ளது. மராத்தி மொழியில் அவை பகிரப்பட்டுள்ளது. "உத்தவ் தாக்கரேவை 'முஸ்லீம் இதயங்களின் பேரரசர் என ஏன் அழைக்கிறார்கள். இந்து இதயங்களின் 'பேரரசரான' அவரால் மற்றொரு மதத்தைச் சேர்ந்தவர்களின் பேரரசராகவும் இருக்கமுடியும்” என சஞ்சய் ராவத் சொன்னதாக அந்த மேற்கோள் பரவியது.
உண்மை சரிபார்ப்பு :
சமூக வலைதளங்களில் பரவும் பதிவுகளின் முக்கியமான வார்த்தைகளை பயன்படுத்தி கூகுளில் தேடியபோது உத்தவ் தாக்கரேவைப் பற்றி சஞ்சய் ராவத் கூறியதாக எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை. இதேபோல சஞ்சய் ரவுத்தின் சமூக ஊடக கணக்குகளையும் நாங்கள் சரிபார்த்தபோது அத்தகைய கருத்து எதுவும் கூறப்படவில்லை. இதனைத் தொடர்ந்து வைரலான படத்தில் இடம்பெற்ற லோக்மாட்டின் சமூக ஊடகப் பக்கங்களைச் சரிபார்த்தோம். ஆனாலும் அதிலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக, சஞ்சய் ராவத்தின் வேறு சில மேற்கோள்கள் கிடைத்தன.
மேலும் வைரலான படம் போலியானது என்பத குறித்து லோக்மத் வழங்கிய விளக்கத்தையும் நாங்கள் கண்டறிந்தோம் . அந்த விளக்கத்தில் “ இதுபோன்ற பதிவுகளை 'லோக்மத்' பதிவு செய்யவில்லை எனவும், 'லோக்மத்' என்ற பெயரையும் லோகோவையும் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தின் ஆதரவாளர்களால் பொய்ச் செய்தியை பரப்பியுள்ளனர் எனவும்” தெரிவித்திருந்தது.
முடிவு:
உத்தவ் தாக்கரேயை 'முஸ்லீம் இதயங்களின் ராஜா' என்று சஞ்சய் ராவத் அழைத்ததாக மாற்றப்பட்ட படம் ( எடிட் செய்யப்பட்ட) படம் பகிரப்படுவது உறுதியாகியுள்ளது.
Note : This story was originally published by The Quint and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.