For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மோடியின் பதவியேற்பு விழாவை மொபைலில் பார்த்து ரசித்தாரா ராகுல் காந்தி? வைரலாகும் வீடியோ - உண்மை என்ன?

09:34 AM Jun 13, 2024 IST | Web Editor
மோடியின் பதவியேற்பு விழாவை மொபைலில் பார்த்து ரசித்தாரா ராகுல் காந்தி  வைரலாகும் வீடியோ   உண்மை என்ன
Advertisement

This news Fact checked by Logically Facts

Advertisement

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவை தனது காரில் அமர்ந்தபடி கண்டுகளித்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி என சமூக வலைதளங்கள் வீடியோ ஒன்று வைரலானது.  இதன் உண்மைத் தன்மை குறித்து லாஜிகலி ஃபேக்ட்ஸ் நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. 

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் ஜூன் 9 அன்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில்  பதவியேற்பு விழா நடைபெற்றது.   பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து 30 கேபினட் அமைச்சர்கள்,  5 தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் மற்றும் 36 இணை அமைச்சர்கள் என மொத்தம் 72 பேர் பதவியேற்றுக் கொண்டனர்.  இந்த பதவியேற்பு விழா மாலை 7:15மணிக்கு தொடங்கி இரவு 10மணி வரை நடைபெற்றது.

பதவியேற்பு விழாவில் எதிர்கட்சித்தலைவர்கள்,  தொழிலதிபர்கள் , திரை பிரபலங்கள் மற்றும் பல வெளிநாட்டு தலைவர்களும் கலந்து கொண்டனர்.

பதவியேற்பு விழாவை ராகுல் காந்தி மொபைலில் பார்த்தாரா?

காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, ஓடும் காருக்குள் அமர்ந்திருக்கும்படியான  16 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  அந்த வீடியோவில் நரேந்திர மோடி இந்தியப் பிரதமராகப் பதவியேற்கும் விழா ராகுல் காந்தி தனது மொபைலில் பார்த்து ரசிப்பது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு 37,000 க்கும் மேற்பட்ட விருப்பங்களைப் பெற்றது, அ தே நேரத்தில் X இல் பதிவிட்ட பயனர் "இந்தியாவில் சக்திவாய்ந்த எதிர்ப்பு எதிர்கட்சியின் ராகுல் காந்தி மற்றும் "மோடி 3.0"  என்கிற கேப்சனோடு பதிவிட்டிருந்தார்.
இதே போல்,  "ராகுல் காந்தி மோடியின் உறுதிமொழியை ரசிக்கிறார்" என்ற  தலைப்புடன் வீடியோ YouTube இல் பகிரப்பட்டது .

உண்மை சரிபார்ப்பு 

சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவின் கீ ஃபிரேம்களை வைத்து அதனை கூகுள் ரிவர்ஸ் தேடலுக்கு உட்படுத்தினோம்.  இந்த தேடலில்,  இந்த காட்சியின் உண்மையான  வீடியோ ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் ஏப்ரல் 17, 2024 அன்று பதிவிடப்பட்டுள்ளது.  அதன் படி உண்மையான வீடியோவில் ராகுல் காந்தியின் காரில் இருந்த மினி டிவி திரையில் எந்த கிளிப்களும் ஒளிபரப்பவில்லை என்பதை இந்த வீடியோ தெளிவாக காட்டுகிறது.  இந்த பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடந்த மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னதாக பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோல வைரல் வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டிற்கும் ராகுல் காந்தியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட அசல் வீடியோவிற்கும் இடையிலான ஒப்பீட்டு அளவில் நிறைய  முரண்பாடுகளை காணலாம்.  ராகுல் காந்தியின் முன் திரையில் காட்டப்பட்ட பிரதமர் மோடி பதவியேகும் காட்சிகளில்  சாம்பல் நிற ஜாக்கெட் அணிந்திருந்தபோது போல உள்ளன.  இருப்பினும், 2024 ஆம் ஆண்டு பதவியேற்பு விழாவின் போது  பிரதமர் மோடி வெள்ளை நிற குர்தா மற்றும்  அடர் நீல நிற ஜாக்கெட்டு அணிந்திருந்தார்.

இந்த உடையில் உள்ள வித்தியாசம்,  ஜூன் 2024 இல் நடைபெற்ற பதவி ஏற்பு விழா அல்ல மாறாக மோடியின் 2019 பதவியேற்பு விழாவில் என்பது உறுதியாகியுள்ளது.

இந்த வீடியோவின் ஆதாரம் என்ன?

அதேபோல வைரலான காட்சிகளில் "@அமர்பிரசாத்ரெட்டி" என்ற வாட்டர்மார்க் இடம்பெற்றுள்ளது.  பாஜக செயல்பாட்டாளராக அடையாளப்படுத்தப்படும் அமர் பிரசாத் ரெட்டி,  ஜூன் 9 அன்று மதியம் 1:39 மணிக்கு தனது X கணக்கில் வைரலான வீடியோவை பதிவிட்டு  "இன்று மாலைக் காட்சிகள்" என்ற தலைப்பில் குறிப்பிட்டிருந்தார்.  இவர் காங்கிரஸை விமர்சித்து இதற்கு முன்பு பல வீடியோக்கள் மற்றும் பதிவுகள் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


முடிவு :

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவை ராகுல் காந்தி தனது மொபைல் போனில் பார்ப்பது போன்ற வைரலான வீடியோ போலியானது என்றும் தவறான நோக்கங்களுக்காக திரித்து பரப்பப்பட்டுள்ளது தகுந்த ஆதாரங்களின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

Note : This story was originally published by Logically Facts  and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement