உத்தர பிரதேச மாநிலத்தின் மஹா கும்பமேளாவை பிரியங்கா காந்தி விமர்சனம் செய்தாரா? - Fact Check
This News Fact Checked by ‘Factly’
சமூக ஊடகங்களில் வைரலாகி ஒரு இடுகை வைரலாகி வருகிறது. X தளத்தில் எழுதப்பட்ட ஸ்கிரீன் ஷாட்டினை பகிர்ந்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் வயநாடு தொகுதியின் எம்பியுமான ப்ரியங்கா காந்தி சொன்னதாக பகிரப்பட்டுள்ளது. அந்த ஸ்கிரீன்ஷாட்டில் நாட்டில் குடிநீர் கிடைக்காத நிலையில், கும்பமேளா சடங்கில் குளியலுக்கு அரசாங்கம் கோடிக்கணக்கில் செலவு செய்வதை விமர்சிக்கும் அறிக்கை இடம்பெற்றிருந்தது.
உண்மை சரிபார்ப்பு :
புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ட்விட்டர் கணக்கை (@PriyankagaINC) தேடியபோது, அப்படிப்பட்ட கணக்கு இல்லை என்பதைக் கண்டறிந்தோம் . பிரியங்கா காந்தி வத்ராவின் அதிகாரப்பூர்வ சரிபார்க்கப்பட்ட X கணக்கு @priyankagandhi ', இதுவாகும் மாறாக '@PriyankagaINC' அல்ல.
இதற்கு முன்பும் பிரியங்கா காந்தி வத்ராவின் ட்வீட் என இந்தியாவை முட்டாள்களின் நாடு என்று குறிப்பிடுவதாகவும், சடங்கு குளியல்களுக்காக பணத்தை செலவழிப்பதற்காக அரசாங்கத்தை விமர்சித்ததாகவும் பரவியது. அந்த ட்வீட் வைரலானபோது அதனை மறுத்து உண்மை சரிபார்ப்பை Factly மேற்கொண்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மஹா கும்பமேளாவில் சடங்கு குளியலுக்கு அரசு செலவழித்ததை பிரியங்கா காந்தி விமர்சித்ததாக பதிவுகள் வைரலானது. இதுகுறித்து ஃபேக்ட்லி உண்மை சரிபார்ப்பில் ஈடுபட்டபோது அவை போலியானது என்பது நிரூபணமாகியுள்ளது.
Note : This story was originally published by ‘Factly’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.