Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரதமர் நரேந்திர மோடி காலி மைதானத்தை நோக்கி கை அசைத்தாரா?

07:54 AM Dec 22, 2024 IST | Web Editor
Advertisement

This news Fact checked by Vishvas News

Advertisement

பிரதமர் நரேந்திர மோடி காலி மைதானத்தை நோக்கி கை அசைப்பதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், பிரதமர் மோடி காலி மைதானத்தை நோக்கி கையை அசைப்பதைக் காணலாம். இந்த வீடியோவை வைரலாக்கும் போது, ​​மைதானத்தில் பொதுமக்கள் யாரும் இல்லை என்றும், இன்னும் பிரதமர் மோடி கையை அசைப்பதாகவும் கூறப்படுகிறது.

விஸ்வாஸ் நியூஸ் வைரலான கிளிப்பை ஆய்வு செய்தது. அதில் குளறுபடியால் கூட்டம் அகற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதேசமயம் அசல் வீடியோவில் கூட்டத்தை தெளிவாகக் காணலாம். விசாரணையில் மேற்கு வங்கம் தொடர்பான இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டு பிரதமர் மோடிக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. விசாரணையில் வைரலான பதிவு போலியானது என நிரூபிக்கப்பட்டது.

இன்ஸ்டாகிராம் ஹேண்டில் ஜக்திஷ்தகத்படேல்  டிசம்பர் 5 அன்று ஒரு வீடியோ கிளிப்பை வெளியிட்டு, பொதுமக்கள் எங்கே என்று கேட்டார்.

இந்த வீடியோவில் பிரதமர் மோடி காலி மைதானத்தில் கையை அசைப்பது போல் காட்டப்பட்டுள்ளது.

வைரல் பதிவு அதே உரிமைகோரலுடன் பிற பயனர்களால் பகிரப்படுகிறது. பதிவின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

உண்மை சரிபார்ப்பு:

முதலில் வைரலான கிளிப்பை ஸ்கேன் செய்து அதைப் பற்றிய கூடுதல் தகவல்கள் சேகரிக்கப்பட்டது. இந்த வீடியோவில் பிரதமர் மோடியுடன் ஒரு திரைப்பட பாடலை இணைத்து கேலி செய்யப்பட்டுள்ளது. வீடியோ கிளிப்பின் பல முக்கிய பிரேம்களை பிரித்தெடுத்த பின்னர் அவற்றை கூகுள் லென்ஸ் கருவி மூலம் தேடப்பட்டது. பாஜகவின் ட்விட்டர் பக்கத்தை தவிர, பல யூடியூப் சேனல்களில் அசல் வீடியோவை கிடைத்தது. 2021-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டு, இது வங்காளத்தில் உள்ள ஜெய்நகரில் இருந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது. அசல் வீடியோவை கீழே காணலாம்.

https://twitter.com/BJP4India/status/1377582817291329539

தேடுதலின் போது, ​​ஏப்ரல் 1, 2021 அன்று பாஜகவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் ஒரு வீடியோ நேரலை கிடைத்தது. இதில், பெங்கால் மாநிலம் ஜெயநகரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றுவதைக் காணலாம். இந்த வீடியோவிலும், வைரல் கிளிப்பில் உள்ள அதே உடைகள் மற்றும் துப்பட்டாவை பிரதமர் மோடி அணிந்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பிரதமர் மோடியின் பேரணியின் காணொளியில் குளறுபடி செய்யப்பட்டு மீண்டும் பொய்கள் பரப்பப்படுவது இதன் மூலம் தெளிவாகிறது.

இந்த கிளிப்பை விஸ்வாஸ் நியூஸ் முன்பு விசாரித்தது. அப்போது விஸ்வாஸ் நியூஸ், மேற்கு வங்க மாநிலத் தலைவர் ஜே.கே.வாஜ்பாய், டைனிக் ஜாக்ரானைத் தொடர்புகொண்டது. வைரல் கிளிப் எடிட் செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். பேரணியில் பெரும் கூட்டம் இருந்தது.

விசாரணையின் முடிவில், ஜக்திஷ்தகத்படேல் என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் சரிபார்க்கப்பட்டது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்வது கண்டறியப்பட்டது.

முடிவு:

விஸ்வாஸ் நியூஸ் ஆய்வு செய்து வைரலான கிளிப் போலியானது என கண்டறியப்பட்டது. அசல் வீடியோவில், மைதானத்தின் மறுபுறம் நின்றிருந்த மக்களை நோக்கி பிரதமர் மோடி கை அசைப்பதை தெளிவாகக் காணலாம். 3ஆண்டுகள் பழமையான காணொளி எடிட் செய்யப்பட்டுள்ளது.

Note : This story was originally published by Vishvas News and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
BJPFact CheckNarendra modiNews7TamilPMO IndiaShakti Collective 2024Team Shakti
Advertisement
Next Article