வங்கதேச சுற்றுலா பயணிகளின் வருகை குறைவால் கொல்கத்தாவில் 60% பிக்பாக்கெட் குறைந்ததா? உண்மை என்ன?
This news Fact Checked by ‘AajTak’
வங்கதேசத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் வருகை குறைவால் கொல்கத்தாவில் 60% பிக்பாக்கெட் குறைந்துள்ளது என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
வங்கதேசத்தில் மக்கள் எழுச்சி மற்றும் இடைக்கால அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, கொல்கத்தாவுக்கு வரும் வங்கதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இந்நிலையில், வங்கதேச சுற்றுலா பயணிகள் இல்லாததால் கொல்கத்தாவில் பிக்பாக்கெட் 60% வரை குறைந்துள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்றின் கிராஃபிக் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பதிவில், "இது சரிதானா, சொல்லுங்கள்" என்ற தலைப்புடன் பகிரப்படுகிறது. மறுபுறம், வைரலான இந்த பதிவு, “கொல்கத்தாவில் வங்கதேச சுற்றுலாப் பயணிகள் யாரும் இல்லை, பிக்பாக்கெட்டுகள் 60% குறைந்துள்ளன” என பகிரப்படுகிறது.
இந்த கிராஃபிக் கார்டு உண்மையானது அல்ல என்று ஆஜ் தக் உண்மைச் சரிபார்ப்பு கண்டறிந்துள்ளது. வங்கதேச செய்தி நிலையத்தின் கிராஃபிக் கார்டைக் எடிட் செய்ததன் மூலம் இந்த அட்டை உருவாக்கப்பட்டது.
உண்மை சரிபார்ப்பு:
வங்கதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவதால் குற்றச் சம்பவங்கள் குறைந்திருந்தால், அதைப் பற்றி சில செய்திகள் வந்திருக்கும். ஆனால் அப்படி எந்த செய்தியும் கிடைக்கவில்லை.
வைரல் கிராஃபிக் கார்டைப் பார்த்தால், டிடி லோகோ தோன்றும். இந்த லோகோ பொதுவாக வங்கதேச செய்தி நிறுவனமான டெய்லி ட்ரிப்யூனுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில், கிராஃபிக் பதிவுடன் ஒத்துப்போகும் சில முக்கிய வார்த்தைகள் தேடப்பட்டது. அப்போது, இரண்டு அறிக்கைகள் கிடைத்தன.
சமீபத்திய அறிக்கை நவம்பர் 11 அன்று வெளியிடப்பட்டது. வங்கதேச சுற்றுலாப் பயணிகளின் பற்றாக்குறையால் கொல்கத்தாவில் வணிகம் 70% வரை குறைந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் தலைப்பு, "வங்காளதேச சுற்றுலாப் பயணிகள் இல்லை, கொல்கத்தாவில் வணிகம் 70% குறைந்துள்ளது." என குறிப்பிடப்பட்டிருந்தது. அதே மாதிரியான மற்றொரு செய்தி செப்டம்பர் 9 அன்று வெளியிடப்பட்டது. "கொல்கத்தாவில் வங்கதேச சுற்றுலாப் பயணிகள் இல்லை, விற்பனை 60% குறைந்துள்ளது" என்ற தலைப்பு இருந்தது.
இந்த வைரல் பதிவை பெரும்பாலும் டாக்கா ட்ரிப்யூனில் இருந்து வந்திருக்கலாம். அப்போது டாக்கா ட்ரிப்யூனின் ஃபேஸ்புக் பக்கத்தை நேரப்படி தேடினால் செப்டம்பர் 9-ம் தேதி வெளியான கிராஃபிக் கார்ட் கிடைத்தது. ஒரு வரியில் எடிட் செய்யப்பட்டுள்ளது தெளிவாகிறது.
முடிவு:
அசல் பதிவில், "கொல்கத்தாவில் வங்காளதேச சுற்றுலாப் பயணிகள் இல்லை, விற்பனை 60% குறைந்துள்ளது" என்று எழுதப்பட்ட கிராஃபிக் கார்டு இருந்தது. எடிட் செய்யப்பட்ட கிராஃபிக் கார்டு மூலம் சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
Note : This story was originally published by ‘AajTak’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.