For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மாவட்ட ஆட்சியர் பெயர் ’ஸ்ரீராம்’ என இருப்பதால் நியமனத்திற்கு எதிராக முஸ்லிம்கள் போராடினார்களா? - வைரல் பதிவு | உண்மை என்ன?

06:23 PM Nov 25, 2024 IST | Web Editor
மாவட்ட ஆட்சியர் பெயர் ’ஸ்ரீராம்’ என இருப்பதால் நியமனத்திற்கு எதிராக முஸ்லிம்கள் போராடினார்களா    வைரல் பதிவு   உண்மை என்ன
Advertisement

This News Fact Checked by ‘Factly

Advertisement

சிவில் சர்வீஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கடாராமனை கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்ட ஆட்சியராக நியமித்ததற்கு எதிராக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்றும் அவரது பெயரில் ஸ்ரீராம் என இருப்பதால் போராட்டம் நடத்தினர் எனவும் சமூகவலைதளங்களில் செய்தி பரவியது. இதுகுறித்து விரிவாக காணலாம்.

கேரளாவில் ஐஏஎஸ் அதிகாரியான ஸ்ரீராம் வெங்கடராமன் என்பவர் ஆலப்புழா மாவட்டத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டார் என்று சமூக ஊடகங்களில் ஒரு பதிவு வைரலாகியது. இப்பதிவில் அவரது ஆணைய ரத்து செய்யக் கோரி ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவரது பெயர் "ஸ்ரீராம்" என்ற காரணத்தால் அவருக்கு எதிராக முஸ்லிம்கள் போராடியதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதுகுறித்த உண்மைத்தன்மையை அறிய பேக்ட்லி ஆய்வுக்கு உட்படுத்தியது.

உண்மை சரிபார்ப்பு :

சமூக வலைதளங்களில் வைரலான செய்தி குறித்த முக்கிய வார்த்தைகளை கூகுள் தேடலுக்கு உட்படுத்தியபோது ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கடாராமனை ஆலப்புழா மாவட்ட கலெக்டராக நியமித்ததற்கு அரசியல் கட்சிகள், முஸ்லீம் அமைப்புகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அமைப்புகள்உட்பட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த செய்திகள் கிடைத்தது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி அறிக்கையின்படி 31 ஜூலை 2022 அன்று, மலபார் பிராந்தியத்தின் பல பகுதிகளில் காந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் தலைமையிலான சன்னி பிரிவைச் சார்ந்த முஸ்லீம் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2019ம்m ஆண்டு குடிபோதையில் வாகனம் ஓட்டி பத்திரிகையாளர் கே.எம்.பஷீரின் மரணத்திற்கு காரணமான வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி வெங்கடராமன் சம்பந்தப்பட்டிருப்பதால், அவர் மக்கள் பணி செய்வதற்கு தகுதியானவர் அல்ல என அந்த போராட்டத்தில் தெரிவிக்கபப்ட்டது. இதேபோல ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெற்ற போராட்டங்களிலும் வெங்கடராமனின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

கேரளாவில் கணக்கெடுப்பு இயக்குநராகப் பணியாற்றிய வெங்கடாராமன் குடிபோதையில்  வாகனம் ஓட்டியதாகக்  கூறப்படுகிறது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சிராஜ் நாளிதழின் திருவனந்தபுரம் பகுதி பொறுப்பு ஆசிரியரும், மூத்த பத்திரிக்கையாளருமான கே.எம்.பஷீர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார். இதில் பஷீர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். திருவனந்தபுரத்தில் அருங்காட்சியகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், ஆகஸ்ட் 03, 2019 அதிகாலையில் இந்தச் சம்பவம் நடந்தது. விபத்தைத் தொடர்ந்து, வெங்கிடராமன் விபத்து குறித்த ஆதாரங்களைக் சிதைக்க முயன்றதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கேரள அரசாங்கத்தால் பதவியில் இருந்து 
இடைநீக்கம் செய்யப்பட்டார்.

திருவனந்தபுரம் அருங்காட்சியகம் காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கடராமன் சம்பந்தப்பட்ட 2019 விபத்து தொடர்பான எஃப்ஐஆரின் நகல் குறிப்பு உள்ளது. மேலும் இந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் பிறப்பித்த 2019 ஜாமீன் உத்தரவையும்  அணுகலாம் . ஊடகவியலாளர் கே.எம்.பஷீரின் மரணத்திற்கு காரணமான இந்த விபத்து தொடர்பான விசாரணை இன்னும் திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தீர்க்கப்படாத சட்ட வழக்குக்கு மத்தியில், கோவிட்-19 தொற்றின்போது , அவரது நிர்வாகத் திறனைக் காரணம் காட்டி, கேரள அரசு வெங்கடராமனை மீண்டும் சுகாதாரத் துறையின் இணைச் செயலாளராக நியமித்தது.

இந்த நிலையில் ஆலப்புழா மாவட்ட ஆட்சியராக ஸ்ரீராம் வெங்கடராமனை நியமித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, கேரள அரசு அவரை அப்பதவியில் இருந்து நீக்கி , கேரள மாநில சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் பொது மேலாளராக நியமித்தது. சமீபத்திய சிவில் சர்வீஸ் மாற்றத்தில், அவருக்கு நிதித் துறையின் வளங்களுக்கான இணைச் செயலர் பொறுப்பு ஒதுக்கப்பட்டு , கேரள நிதிக் கழகத்தில் நிர்வாக இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

மேற்குறிப்பிட்ட விவரங்களின் அடிப்படையில், வைரலான பதிவில் கூறப்பட்டுள்ளபடி வெங்கடராமனின் எனும் பெயரைக் காரணம் காட்டி முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது தெளிவாகிறது. ஊடகவியலாளர் கே.எம்.பஷீரின் மரணத்திற்கு வழிவகுத்த 2019 ஆம் ஆண்டு விபத்தில் அவர் மீது வழக்கு உள்ளதுதான் எதிர்ப்புக்களுக்கு முதன்மையான காரணம்.

கேரளாவில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய சம்பவத்தில் ஒரு பத்திரிகையாளரின் மரணத்திற்கு காரணமான சிவில் சர்வீஸ் அதிகாரிக்கு எதிராக முஸ்லிம்கள் நடத்திய போராட்டங்களில் எந்த மதக் கோணமும் இல்லை என்பது தெளிவாகிறது.

முடிவு :

2022ல் கேரளாவின் ஆலப்புழா மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்ட ஸ்ரீராம் வெங்கிடராமன், 2019ல் குடிபோதையில் வாகனம் ஓட்டி பஷீர் என்ற பத்திரிகையாளரின் மரணத்திற்கு காரணமானவர் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனால அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் அவரை ஆலப்புழா மாவட்ட கலெக்டராக கேரள அரசு நியமித்ததை கண்டித்து கேரளாவின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். அவருக்கு எதிரான போராட்டம் என்பது அவரது மதத்திற்கு எதிராகவோ அல்லது அவரது பெயரில் "ஸ்ரீராம்" என இருந்ததால் அல்ல. எனவே, இடுகையில் கூறப்பட்டுள்ள கூற்று தவறானது .

Note : This story was originally published by ‘Factly’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement