2025 மகா கும்பமேளா நடைபெற்று வரும் நிலையில், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டிம்பிள் யாதவ் ஆற்றில் நீராடும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் 2025 மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு புனித நீராடினார் (இங்கே,இங்கேமற்றும் இங்கே) என பகிரப்பட்டு வருகிறது.
இந்த வைரல் காணொளியின் விவரங்களைச் சரிபார்க்க, வைரல் காணொளியிலிருந்து கீஃப்ரேம்களைப் பயன்படுத்தி கூகுள் தலைகீழ் படத் தேடல் மேற்கொண்டதில், 2024ம் ஆண்டில் பல சமூக ஊடக பயனர்களால் யூடியூப்பில் பகிரப்பட்ட அதே காணொளி கிடைத்தது (இங்கே, இங்கே). இதன்மூலம் வைரலாகும் காணொளிக்கும் 2025 மகா கும்பமேளாவுடன் தொடர்புடையது அல்ல என உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும் விசாரணையில், அக்டோபர் 18, 2022 அன்று 'தி ஹெச்எஃப்எஃப் நியூஸ்' என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட இதேபோன்ற காட்சிகளைக் கொண்ட ஒரு காணொளி கிடைத்தது. அதன் தலைப்பு, "கங்கையின் மடியில் முலாயம்: அகிலேஷ் ஈரமான கண்களுடன் சாம்பலை மூழ்கடித்தார்" (இந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது). காணொளியின் விளக்கத்தின்படி, முலாயம் சிங் யாதவின் அஸ்தியை கரைக்கும் போது ஹரித்வாரில் டிம்பிள் யாதவ் கங்கையில் குளிப்பதை இது காட்டுகிறது.
கூடுதலாக, "முலாயம் சிங் அஸ்தி விசர்ஜன்: அகிலேஷ் யாதவ் கங்கையில் நீராடி, நேதாஜியின் இரட்சிப்புக்காக பிரார்த்தனை செய்தார்" என்ற தலைப்பில், 'நியூஸ்18 உபி உத்தரகாண்ட்' இன் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் அக்டோபர் 17, 2022 அன்று பதிவேற்றப்பட்ட இதே போன்ற காட்சிகளைக் கொண்ட ஒரு வீடியோவும் கிடைத்தது. அக்டோபர் 17, 2022 அன்று முலாயம் சிங் யாதவின் அஸ்தி கரைக்கப்படும் போது டிம்பிள் யாதவ் மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் ஹரித்வாரில் கங்கையில் குளித்ததாக வீடியோவின் விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹரித்வாரில் முலாயம் சிங்கின் அஸ்தி கரைப்பில் (அஸ்தி விசர்ஜன்) அகிலேஷ் யாதவ் மற்றும் டிம்பிள் யாதவ் பங்கேற்றது பற்றிய பிற செய்தி அறிக்கைகளை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இந்தத் தகவலின் அடிப்படையில், வைரல் காணொளியில், 2022 அக்டோபரில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் டிம்பிள் யாதவ் புனித நீராடுவதைக் காட்டுகிறது என்பது தெளிவாகிறது. வைரல் காணொளி மற்றும் 2022 செய்தி அறிக்கை காணொளிகளின் ஒப்பீட்டை கீழே காணலாம்.
கூடுதலாக, ஜனவரி 30, 2024 நிலவரப்படி, இந்தக் கட்டுரை வெளியிடப்படும் நேரத்தில், டிம்பிள் யாதவ் பிரயாக்ராஜில் 2025 மகா கும்பமேளாவில் பங்கேற்றதாக எந்த அறிக்கையும் இல்லை. அவரது சமூக ஊடகக் கணக்குகளும் (இங்கே, இங்கே, இங்கே) சரிபார்க்கப்பட்டது. மேலும் 2025 மகா கும்பமேளாவில் அவர் பங்கேற்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
சுருக்கமாக, இந்த காணொளி 2025 மகா கும்பமேளாவுடன் தொடர்பில்லாதது. இது 17 அக்டோபர் 2022 அன்று முலாயம் சிங் யாதவின் அஸ்தி கரைக்கப்பட்டபோது ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் டிம்பிள் யாதவ் புனித நீராடுவதைக் காட்டுகிறது என உறுதி செய்யப்பட்டது.
Note : This story was originally published by 'Factly’and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.