Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அதானியை திருப்திப்படுத்த ம.பி முதலமைச்சர் மோகன் யாதவ் விவசாயிகள் மீது தடியடி நடத்தினாரா? - உண்மை என்ன?

தொழிலதிபர் கௌதம் அதானியை திருப்திப்படுத்த விவசாயிகள் மீது தடியடி நடத்த மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் உத்தரவிட்டார் என சமூக வலைதளங்களில் ஒரு காணொலி வைரலாக பரவியது.
11:46 AM Feb 24, 2025 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by ‘AajTak

Advertisement

தொழிலதிபர் கௌதம் அதானியை திருப்திப்படுத்த விவசாயிகள் மீது தடியடி நடத்த மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் உத்தரவிட்டார் ? இந்தக் கூற்றுடன் கூடிய காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொலியைப் பகிர்ந்த பலர் மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பியதற்காக காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தியதாக எழுதினர்.

அந்த காணொலியில் இடம்பெற்றுள்ள இடம் ஏதோ ஒரு கிராமத்தைச் சேர்ந்தது போல் தெரிகிறது. இதில், போலீசார் கைகளில் குச்சிகளை வைத்திருப்பதைக் காணலாம். காவல்துறையினருக்கு முன்னால் ஒரு கூட்டம் இருக்கிறது, அவர்கள் அங்கிருந்து பலவந்தமாக விரட்டப்படுகிறார்கள்.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒருவர்  "அதானியை திருப்திப்படுத்த, மோகன் யாதவ் அரசு சிங்க்ரௌலி விவசாயிகளின் எதிரியாக மாறியது. அதானியின் நிறுவனத்திற்காக விவசாயிகளிடமிருந்து நிலங்கள் பறிக்கப்பட்டன. அவர்களுக்கு சரியான இடமாற்றமோ அல்லது அவர்களின் நிலத்திற்கு சரியான விலையோ கிடைக்கவில்லை. அதேபோல வேலை வாய்ப்பு என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மக்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டபோது அவர்கள் தடிகளால் தாக்கப்பட்டனர்” என அப்பதிவில் இடம்பெற்றிருந்தது.

இந்த காணொலி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தது அல்ல, மாறாக ராஜஸ்தானின் நாகெளரிலிருந்து எடுக்கப்பட்டது என்பதை ஆஜ் தக் உண்மைச் சரி பார்ப்பு கண்டறிந்துள்ளது. அங்கு சிமென்ட் நிறுவனத்திற்கு எதிராகப் போராடும் விவசாயிகள் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.

உண்மை சரிபார்ப்பு : 

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவின் முக்கிய பிரேம்களைத் கூகுள் ரிவர்ஸ் இமேஜில் தேடியபோது, அது ரமண்தீப் சிங் மான் என்ற நபரின் சமூக வலைதளங்களில் இருப்பதைக் கண்டோம்.  இது 8 ஜனவரி 2025 அன்று பதிவேற்றப்பட்டது. இந்த காணொலி நாகௌரிலிருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து முக்கிய வார்த்தைகளை தேடியபோது  நாகௌர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹனுமான் பெனிவாலின் சமூக ஊடகப் பதிவைக் கண்டோம். அவர் அதே வீடியோவை ஜனவரி 8, 2025 அன்று தனது X கணக்கில் பதிவிட்டார். தனது பதிவில், நாகௌரில், JSW என்ற சிமென்ட் நிறுவனத்திற்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது வலுக்கட்டாயமாக தடியடி நடத்தப்பட்டதாக பெனிவால் கூறியிருந்தார்.

இது தவிர, வைரலான காணொலியைக் காணக்கூடிய பல செய்தி அறிக்கைகளையும் நாங்கள் கண்டோம். இங்கே அது நாகௌரிலிருந்து எடுக்கப்பட்டதாக கூறுகிறது.

நியூஸ்18 இந்தியாவின் வீடியோ அறிக்கையின்படி நாகௌரில் ஒரு சிமென்ட் நிறுவனத்திற்கு எதிராகப் போராடிய விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பல விவசாயிகள் காயமடைந்தனர், சில போலீஸ் வாகனங்கள் சேதமடைந்தன. கடந்த பல மாதங்களாக, நிலம் கையகப்படுத்துதல் பிரச்சினையில் விவசாயிகள் மற்றும் சிமென்ட் நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்திகள் அறிக்கையின்படி விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவம் நாகௌர் மாவட்டத்தின் ஜெயால் பகுதியில் உள்ள ஹரிமா மற்றும் சரசானி கிராமங்களில் நடந்தது. இங்குள்ள விவசாயிகள் பல நாட்களாக நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிராகப் போராடி வந்தனர்.

முடிவு : 
தொழிலதிபர் கௌதம் அதானியை திருப்திப்படுத்த விவசாயிகள் மீது தடியடி நடத்த மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் உத்தரவிட்டார் என சமூக வலைதளங்களில் ஒரு காணொலி வைரலாக பரவியது. இதுகுறித்து ஆய்வுக்கு உட்படுத்தியபோது வைரல் காணொலி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தது என்று தவறான கூற்றுடன் பகிரப்படுவது கண்டறியப்பட்டது. இச்சம்பவம் உண்மையில் ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் மாவட்டத்தில் ஜெ.எஸ்.டபில்யூ நிறுவனத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டமாகும் என்பது தெளிவாகிறது.

Note : This story was originally published by ‘AajTak’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
நாகௌர்தவறான செய்திவீடியோ சரிபார்ப்புformersgautham adanimadya pradeshProtest
Advertisement
Next Article