Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“டெல்லியில் மின் மானியம் ரத்து செய்யப்படும்” என அமைச்சர் அதிஷி கூறினாரா?

08:24 AM May 25, 2024 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by Logically Facts

Advertisement

டெல்லியில் மின் மானியத்தை நிறுத்தப் போவதாக அந்த மாநிலத்தின் மின்சாரத் துறை அமைச்சர் அதிஷி கூறியதாக வைரலாகி வரும் வீடியோ தவறான தகவலுடன் பகிரப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

டெல்லியில் மின் மானியம் நிறுத்தப்படும் என்று டெல்லியின் மின்துறை அமைச்சர் அதிஷி கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “டெல்லியில் இலவச மின்சாரம் முடிவடைகிறது" என தலைப்பிட்டு பகிரப்பட்டு வருகிறது. ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பல பயனர்கள் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர்.

தேர்தலுக்கு முன் மானியத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்கள் முடிவு செய்ய வேண்டும் எனவும் இந்த பதிவு பகிரப்பட்டு வருகிறது.

34 விநாடிகள் கொண்ட அந்த வீடியோ, “தலைநகர் டெல்லியில் உள்ள 46 லட்சம் குடும்பங்களுக்கான மின் மானியம் இன்றுடன் முடிவடைகிறது. அதாவது நாளை முதல் மானியத்துடன் கூடிய மின் கட்டணம் வழங்கப்படாது. முன்பு பூஜ்ஜியம் பில் பெறுபவர்களின் கட்டணம் அதிகரிக்கப்படும். மேலும், 50% மானியம் பெற்றவர்கள் அதிக பில்களை எதிர்கொள்வார்கள்” என அமைச்சர் அதிஷி கூறுவது போல் அமைந்துள்ளது.

இந்த வீடியோ குறித்த உண்மை நிலையை கண்டறிய Logically Facts முடிவு செய்தது.

உண்மை சரிபார்ப்பு:

வைரலான வீடியோ குறித்து கூகுளில் தேடப்பட்டது. அப்போது, ஏப்ரல் 14, 2023 அன்று ஆம்ஆத்மி கட்சி (AAP) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ கண்டறியப்பட்டது. அதில், எல்ஜியின் அனுமதி நிலுவையில் உள்ளதாகக் கூறி, மின் மானியத்தை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று அதிஷி கூறியுள்ளார்.

மின்சார விநியோக நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு அனுப்பிய பல கடிதங்களைக் காட்சிப்படுத்திய அவர், 2023-2024-ம் ஆண்டிற்கான கட்டணத்தை உயர்த்த இருப்பதாகக் கூறினார். அதோடு, டாடா பவர் நிறுவனத்தின் கடிதத்தை அவர் எடுத்துரைத்தார். மேலும் மின் மானியம் தொடர்வது குறித்து தகவல் இல்லாததால் மானியமில்லாத பில்லிங் தொடங்கப்படும் என்று கூறினார்.

வைரலான வீடியோவில் அசல் காட்சியின் முதல் ஒரு நிமிடம் 20 வினாடிகள் மட்டுமே உள்ளது. ஆனால், முழு வீடியோவில், வைரல் கிளிப்பில் இருந்து விடுபட்ட மானியம் திரும்பப் பெறப்பட்டதன் பின்னணியில் உள்ள காரணங்களை அதிஷி விவரிக்கிறார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸின் அறிக்கையின்படி , LG நிறுவனம் இந்தக் கூற்றுக்களை மறுத்து, மின் மானியத்தை நீட்டிக்க அனுமதி அளிக்கப்பட்டதாகக் கூறியுள்ளது தெரியவந்தது. 

டெல்லியில் மின்சார மானியம்:

டெல்லி அரசு ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் 200 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்குகிறது. 201 முதல் 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது. மின் மானியத் திட்டத்திற்காக அரசாங்கம் ஆண்டுக்கு 3,500 கோடி ரூபாய் செலுத்துவதாகக் கூறப்படுகிறது .

மார்ச் 7, 2024 அன்று, ஆம் ஆத்மி ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதன்படி, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அமைச்சரவை 2024-25 நிதியாண்டிற்கான மின் மானியத் திட்டத்தைத் தொடர ஒப்புதல் அளித்தது.

முடிவு:

ஏப்ரல் 2023 செய்தியாளர் சந்திப்பில் டெல்லி மின்துறை அமைச்சர் அதிஷி பேசிய வீடியோவின் ஒரு பகுதியை பகிர்ந்து, தவறான தகவல்கள் பரப்பப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

Note : This story was originally published by ‘Logically Facts’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
AAPatishi marlenaDelhiElectricityLoksabha Elections 2024News7Tamilnews7TamilUpdatesParliamentary elections 2024subsidy
Advertisement
Next Article