ஃபாலஸ்தீனக் கொடியுடன் மைக் டைசன் போஸ் கொடுத்தாரா? - வைரலாகும் படம் உண்மைதானா?
This News Fact Checked by ‘Factly’
பாலதீனக் கொடியுடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் போஸ் கொடுக்கும் படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து உண்மைச் செய்தியை விரிவாக காணலாம்.
முன்னாள் ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசனின் தனது தோள்களில் பாலஸ்தீனியக் கொடியை அணிந்தபடி குத்துச் சண்டை வளையத்தில் நிற்கும் படங்கள் சமூக ஊடகங்களில் ஒரு பதிவு வைரலானது. 15 நவம்பர் 2024 அன்று ஜேக் பாலுடன் அவர் சண்டையிடுவதற்கு முன் எடுக்கப்பட்ட படம் என்று சில பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருந்தன இந்த செய்தியின் உண்மைத் தன்மையை அறிய ஃபேக்ட்லி முடிவு செய்தது.
உண்மைச் சரிபார்ப்பு :
சமூக வலைதளங்களில் வைரலான படங்களை ஆய்வு செய்ய முழு போட்டியையும் முழுமையாக மதிப்பாய்வு செய்தோம். அவற்றில் நிகழ்வுக்கு முன்னரோ அல்லது பின்னரோ மைக் டைசன் பாலஸ்தீனியக் கொடியுடன் போஸ் கொடுத்த காட்சிகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடலுக்கு உட்படுத்தியபோது, இந்த செய்தி குறித்த நம்பகமான ஆதாரங்களையும் கிடைக்கவில்லை.
அதேபோல பாலஸ்தீனக் கொடியில் உள்ள முரண்பாடுகளையும் கண்டறிய முடிந்தது. வைரலான படத்தில், கொடியின் மீதுள்ள சிவப்பு முக்கோணத்தின் முனை, டைசன் கொடியின் எல்லையை நோக்கிச் செல்கிறது. உண்மையில், முனை வெளிப்புறமாக, கொடியின் வலது பக்கத்தை நோக்கிச் செல்கிறது. ஆனால் உண்மையான பாலஸ்தீனக் கொடியின் சிறிது மாறுபடுகிறது.
அதேபோல டைசனின் மறைந்த மகள் எக்ஸோடஸைக் கௌரவிக்கும் வகையில் டைசனின் மார்பில் பச்சை குத்திய படம் வைரலான படத்தில் இல்லாததையும் கவனிக்க முடிந்தது. எனவே இந்த படம் AI-ஆல் உருவாக்கப்பட்டதாக நாங்கள் சந்தேகித்து, True Media AI டிடெக்டர் கருவியைப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்தோம். இது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி படம் உருவாக்கப்பட்டது என்பதைக் உறுதியானது.
ஆனாலும் இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் மைக் டைசன் அவர் பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் விதமாக மணிக்கட்டுப் பட்டையை அணிந்திருந்தார் மற்றும் யூத எதிர்ப்புக்கு எதிராகவும் பேசினார். நவம்பர் 2023 இல், மைக் டைசன் மியாமியில் ஒரு இரவு விருந்தில் கலந்து கொண்டார், அது இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் (IDF) நிதி திரட்டும் நிகழ்வாக மாறியது. ஒரு சாதாரண இரவு விருந்தின் ஒரு பகுதியாக தான் அழைக்கப்பட்டதாகவும், அதன் நிதி திரட்டும் நோக்கம் குறித்து தனக்குத் தெரியாது என்றும் பின்னர் தெளிவுபடுத்தினார் .
பாலஸ்தீனக் கொடியுடன் மைக் டைசன் இருப்பதாக வைரலாகும் படம் AI -ஆல்உருவாக்கப்பட்ட படமாகும். இது உண்மைப் படம் போல பகிரப்பட்டுள்ளது.
Note : This story was originally published by ‘Factly’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.