For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

2024 தேர்தலில் ஒவைசிக்கு எதிராக மௌலானா மதானி பேசினாரா? : வைரலாக பரவும் வீடியோ - நியூஸ் மீட்டர் சொல்வதென்ன?

05:34 PM May 20, 2024 IST | Web Editor
2024 தேர்தலில் ஒவைசிக்கு எதிராக மௌலானா மதானி பேசினாரா    வைரலாக பரவும் வீடியோ   நியூஸ் மீட்டர் சொல்வதென்ன
Advertisement

This news fact checked by Newsmeter

Advertisement

அகில இந்திய மஜ்லிஸே இ இதிஹாதுல் முஸ்லிமீன் தலைவரும் ஹைதராபாத் எம்பியுமான அசதுத்தீன் ஒவைசியை எதிர்த்து ஜம்இய்யத்துல் உலமா இ ஹிந்த் தலைவர் மௌலானா மஹ்மூத் மதானி பேசியதாக வீடியோ ஒன்று வைரலாக பரவியது. இது குறித்த உண்மைத் தன்மையை நியூஸ் மீட்டர் உண்மை சரிபார்ப்பு நிறுவனம் ஆய்வுக்குட்படுத்தியது. இது குறித்து விரிவாக காணலாம்.

ஒவைசி குறித்து ஜமாத்துல் உலமா தலைவர் பேசியதாக பரவும் வீடியோ : 

2024 மக்களவைத் தேர்தல் 7கட்டங்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இன்று 5ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அகில இந்திய மஜ்லிஸே இ இதிஹாதுல் முஸ்லிமீன் தலைவரும் ஹைதராபாத் எம்பியுமான அசதுத்தீன் ஒவைசியை எதிர்த்து ஜம்இய்யத்துல் உலமா இ ஹிந்த் தலைவர் மௌலானா மஹ்மூத் மதானி பேசியதாக வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் என அசாதுதீன் ஒவைசி கூறிய கருத்துக்களை ஜம்இய்யத்துல் உலமா-இ-ஹிந்த் தலைவர் மௌலானா மஹ்மூத் ஏ மதனி நிராகரிப்பதாக பரவும் வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது..

” முஸ்லிம்கள் யாரை அரசியல் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும், யாரை தேர்ந்தெடுக்க கூடாது என்று சொல்ல இவர்கள் யார்? மேலும் முஸ்லிம்கள் ஏன் முஸ்லிமல்லாத ஒருவரைத் தலைவராக ஏற்க வேண்டும்? உங்களை நீங்களே விற்றுவிட்டீர்கள் என்றால், நாங்களும் எங்களை விற்க வேண்டுமா? நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், ஒரு முஸ்லிமை உங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ளாதீர்கள்.  எந்த அடிப்படையில் பொதுமக்களிடம் இப்படி ஒரு வேண்டுகோளை வைக்கிறீர்கள்?:” என ஜம்இய்யத்துல் உலமா-இ-ஹிந்த் தலைவர் மௌலானா மஹ்மூத் ஏ மதனி பேசியுள்ளார்.

https://x.com/HamidRazaIND/status/1791167130689470583

உண்மை சரிபார்ப்பு : 

மௌலானா மதானியின் கருத்துக்களை ஆய்வுக்கு  உட்படுத்தியதில் வைரலாக பரவும் வீடியோ கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து வெளியானவை.  அவற்றிற்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நியூஸ்மீட்டர் கண்டறிந்துள்ளது.

இதற்காக நியூஸ் மீட்டர் உண்மை சரிபார்ப்பு செய்தி நிறுவனம் வைரல் வீடியோவின் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் தேடலுக்கு உட்படுத்தியது.  ஆய்வின் முடிவில் கிடைத்த தகவலின்படி இந்த  வீடியோ நவம்பர் 18, 2023 அன்று ஹைதராபாத் அரசியல்வாதியும் மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக் (MBT) செய்தித் தொடர்பாளருமான அஞ்சத் உல்லா கானின் X தளம் மற்றும் முகநூல் பதிவைக் காட்டியது.  அந்தப் பதிவில் அஞ்சத் உல்லா கான் மதானியின் கருத்துக்களை மேற்கோள் காட்டி, மகாராஷ்டிராவில் ஓவைசியின் அரசியல் பிரவேசம் எடுபடாது என தெரிவித்திருந்தார்.

இதேபோல நவம்பர் 11, 2018 அன்று Zee News வெளியிட்ட ' செய்தியில் மௌலானா மதானி AIMIM தலைவர் ஓவைசியை விமர்சித்தார்' என்ற தலைப்பில் வெளியான செய்தியிலும் இதே வீடியோவைக் இடம்பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜம்இய்யத்துல் உலமா இ-ஹிந்தின் X கணக்கை ஆய்வுக்கு உட்படுத்தியதில்  தெலங்கானாவுக்கு வெளியே மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் AIMIM இன் முடிவு குறித்து மௌலானா மதானி எந்த விமர்சனமும் வைக்கவில்லை எனத் தெரிகிறது.

முடிவு:

அசதுத்தீன் ஒவைசியை எதிர்த்து ஜம்இய்யத்துல் உலமா இ ஹிந்த் தலைவர் மௌலானா மஹ்மூத் மதானி பேசியதாக பரவும் வீடியோ 2018ஆம் ஆண்டு வெளியானது எனவும் 2024 மக்களவைத் தேர்தலில் வெளியானது இல்லை எனவும் அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

This story was originally published by Newsmeter and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement