மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவின் மகள் முஸ்லிம் இளைஞரை திருமணம் செய்தாரா ? - #Factly -ன் உண்மை சரிபார்ப்பு கூறுவது என்ன ?
This News Fact Checked by ‘Factly’
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லானின் மகளும் ஐஏஎஸ் அதிகாரியுமான அஞ்சலி பிர்லா ராஜஸ்தானைச் சார்ந்த ஒரு முஸ்லிம் தொழிலதிபரை திருமணம் செய்துள்ளார் என சமூக வலைதளங்கள் படங்கள் வைரலானது. இது தொடர்பாக பேக்ட்லி நடத்திய உண்மைச் சரிபார்ப்பு குறித்து விரிவாக காணலாம்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதியின் எம்பியும் , மக்களவை சபாநாயகருமான ஓம் பிர்லாவின் மகள் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளன. ஓம் பிர்லாவின் மகளான அஞ்சலி பிர்லா ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். இவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவை பூர்வீகமாக கொண்ட வணிகக் குடும்பத்தைச் சேர்ந்த முகமது அனிஷ் என்ற முஸ்லீம் இளைஞரை திருமணம் செய்தார் என மணந்தார் என சமூக வலைதளங்களில் . சமூக வலைதளங்களில் வைரலான பதிவுகளை பேக்ட்லி உண்மை சரிபார்ப்பு செய்தி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது.
உண்மை சரிபார்ப்பு
ஓம் பிர்லாவின் மகள் அஞ்சலி பிர்லா திருமணம் குறித்த பதிவுகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான பதிவுகளை சரிபார்க்க, கூகுள் கீவேர்டில் தேடலை மேற்கொண்டபோது அது நவம்பர் 13, 2024 தேதியிட்ட செய்தி அறிக்கை அழைத்துச் சென்றது இதன்படி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் மகள் அஞ்சலி பிர்லா, தொழிலதிபர் அனிஷ் ரஜனியை நவம்பர் 12 அன்று திருமணம் செய்துகொண்டார் எனவும் அனிஷ் ஒரு சிந்தி வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் உறுதியானது.
அதேபோல இந்த தேடலில் கயா தொகுதியின் முன்னாள் எம்.பி.யும், பாரதிய ஜனதா கட்சி உறுப்பினருமான ஹரி மஞ்சியின் 13 நவம்பர் 2024 தேதியிட்ட ட்வீட் ஒன்று கிடைத்தது. அதில் அஞ்சலி பிர்லாவின் திருமணம் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சில தகவல்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. அப்பதிவில் திருமண அழைப்பிதழ் பகிரப்பட்டதால் அதிலிருந்து கிடைத்த தகவலின்படி அனிஷ் ரஜனி, கோட்டாவில் உள்ள வணிகக் குடும்பத்தைச் சேர்ந்த சிந்தி இந்து என்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல திருணம அழைப்பிதழில் அனிஷின் தந்தை மற்றும் தாய் பெயர்களும் இடம்பெற்றிருந்ததால் அவர் முஸ்லிம் அல்ல இந்து குடும்பத்தைச் சார்ந்தவர்தான் என்பது உறுதியானது. மொத்தத்தில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் மகள் அஞ்சலி பிர்லா அனிஷ் ரஜனி எனும் ஒரு சிந்தி இந்துவை திருமணம் செய்துள்ளார் என்றும் முஸ்லீம் என பரவும் தகவல்கள் பொய் என்பது உறுதியாகியுள்ளது.
அஞ்சலி பிர்லா குறித்து இதற்கு முன்பும் சிவில் சர்வீஸ் தேர்வில்கலந்து கொள்ளாமல் நேரடியாக ஐஏஎஸ் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக அஞ்சலி பிர்லாவைப் பற்றிய இதேபோன்ற தகவல்கள் பரவியது குறிப்பிடத்தக்கது .
முடிவு :
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் மகள் அஞ்சலி பிர்லா, முஸ்லிம் இளைஞரை திருமணம் செய்தார் என பரவும் தகவல் தவறானது என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.
Note : This story was originally published by ‘Factly’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.