ஹிரோவாக ஜெயித்தாரா KPY பாலா..? - ”காந்தி கண்ணாடி” படத்தின் திரை விமர்சனம்!
சின்னத்திரை நடிகர் பாலா நடிப்பில் இயக்குநர் ஷெரிப் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் காந்தி கண்ணாடி திரைப்படம் இன்று திரையருங்குகளில் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் அனைவரியும் சிரிக்க வைத்த பாலா படத்தில் வேற ரூட் எடுத்துள்ளார். அது என்ன ரூட்..? வாங்க பார்க்கலாம்.
சென்னையில் செக்ரியுட்டி வேலை பார்க்கும் பாலாஜி சக்திவேலுக்கு தனது 60வது திருமணத்தை சிறப்பாக நடத்தணும். திருமணத்துக்கு முன்பு மனைவி அர்ச்சனா கேட்ட விஷயங்களை, இந்த திருமணம் மூலமாக நிறைவேற்றி கொடுக்கணும்னு ஆசைப்படுகிறார். இவ்வளவு ஆசைகள் கொண்ட 60வது திருமணத்தை நடத்த எவ்வளவு செலவாகும் என்று ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி நடத்தும் கேபிஓய் பாலாவிடம் கேட்கிறார். அவரோ 52 லட்சம் கணக்கு சொல்கிறார்.சாதாரண செக்ரியூட்டிக்கு இவ்வளவு பணம் எப்படி கிடைக்கும் என பாலா டீம் சந்தேகப்படுகிறது.
கோவை அருகே எனக்கு சொத்து இருக்கிறது. அதை விற்கலாம் என அவர்களை அழைத்து செல்கிறார் பாலாஜிசக்திவேல். அங்கே இருக்கும் பல கோடி மதிப்புள்ள சொத்தை 80 லட்சத்துக்கு விற்றுவிட்டு சென்னை வருகிறார்கள். 60வது திருமண ஏற்பாடுகள் தொடங்கும்நிலையில் அவர்கள் வைத்திருக்கும் பணம் செல்லாது, பணமதிப்பு இழந்து நடவடிக்கை தொடங்குகிறது என சென்ட்ரல் கவர்மென்ட் அறிவிக்கிறது. பணத்தை மாற்ற அவர்கள் பாடதபாடு படுகிறார்கள். அந்த பணத்தை மாற்றினார்களா? பாலாஜிசக்திவேல், அர்ச்சனா 60வது திருமணம் அவர்கள் நினைத்த மாதிரி நடந்ததா? பாலா அதற்கு எப்படி உதவுகிறார் என்பது காந்தி கண்ணாடி படத்தின் கரு. ஷெரிப் இயக்கி இருக்கிறரர்
மனைவி அர்ச்சனா மீது இந்த வயதிலும் காதல் கொண்டவராக, அவர் சமைத்து அனுப்பும் உணவை ருசி பார்த்துவிட்டு, சூப்பர் என போனில் பாராட்டுபவராக, எப்படியாவது மனைவி ஆசைப்படி 60வது திருமணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் துடிப்பவராக, கைவசம் இருக்கும் பணத்தை மாற்ற பதறுபவராக, மிக சிறப்பாக நடித்து இருக்கிறார் பாலாஜிசக்திவேல். அவரின் டிரஸ், உடல்மொழி, டயலாக் டெலிவரி, எமோசன் என அனைத்தும் அருமை. அவரை மற்றவர்கள் கிண்டல் செய்தாலும், திட்டினாலும் அதை பற்றி கண்டுகொள்ளாமல், காரியத்தை சாதிப்பவராக கலக்கி இருக்கிறார். கடைசி அரை மணி நேரம் நடிக்காமல் நடித்து ஸ்கோர் செய்து இருக்கிறார். அவர் மனைவியாக வரும் வீடு அர்ச்சனா, அந்த வயதுக்குரிய மெர்ச்சூடு கேரக்டரில் நன்றாக நடித்து இருக்கிறார். குறிப்பாக, கடைசி அரை மணி நேரத்தில் ஒரு உணர்ச்சிபூர்வமாக, சோக சீனில் நடித்து கண் கலங்க வைக்கிறார்.
ஆனாலும், பாலாஜிசக்திவேல், அர்ச்சனா சீன்களில் ஓவர் டோஸ் அதிகம். அதை கொஞ்சம் குறைத்து, இன்னும் அழுத்தமாக நடிக்க வைத்து இருந்தால் படம் ஒருபடி மேலே போய் இருக்கும். பண மதிப்பு இழப்பு சம்பந்தப்பட்ட சீன்களை, அதன் வலிகளை இன்னும் எளிமையாக சொல்லியிருக்கலாம். சிலசீன்களை அதை காமெடியாக சொன்னது படத்தின் மைனஸ் ஆக இருக்கிறது. 2016ல் கதை நடப்பதால் அதை, இன்றைய காலகட்டத்துடன் பொருத்தி பார்க்க வேண்டியது உள்ளது. அது, சில சமயங்களில் குழப்பமாக இருக்கிறது. சில கேள்விகளை எழுப்புகிறது.
தான் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் கேபிஒய் பாலா காமெடி பண்ணுவார். நம்மை சிரிக்க வைப்பார் என நினைத்தால், இந்த கதையில் அவர் வேறு மாதிரி. ஆரம்பத்தில் சில இடங்களில் கலகல டயலாக் பேசுகிறார். ஒரு கட்டத்தில் பாலாஜிசக்திவேல் பணத்தை ஆட்டையை போட நினைக்கிறார். கடைசி அரை மணி நேரம் கதை சம்பந்தப்பட்ட உணர்ச்சிகர சீனில், ரொம்பவே உணர்வுபூர்வமாக நடித்து அழ வைத்துவிடுகிறார். பாலாவிடம் இப்படிப்பட்ட நடிப்பு, கதையை யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். ஒரு பாடல்காட்சியில் மட்டும் செம குத்தாட்டம் போட்டு இருக்கிறார். நடிகனாக ஜெயித்து இ ருக்கிறார்.
இவர்களை தவிர, ஹீரோயினாக வரும் நமிதாகிருஷ்ணமூர்த்தி, பாலா நண்பர்கள், பணத்தை மாற்ற நினைக்கும் கும்பல், ரியல் எஸ்டேட் அதிபர் என பல சுவாரஸ்ய கேரக்டர்கள். பாடல், இசை ஓகே ரகம். கல்யாணம், பிளானிங், பண பரிமாற்றம் என முதற்பாதி ஒரு டோனிலும், ஏமாற்றம், துரோகம், சோகம் என மறுபாதி வேறு டோனிலும் நகர்கிறது. படத்தின் பலமே அந்த கடைசி அரைமணிநேரம்தான். அது என்ன என்று சொன்னால் ஸ்பாயிலர் ஆகிவிடும். அந்த சீன்களை அவ்வளவு அழுத்தமாக எடுத்து இருக்கிறார் இயக்குனர். கடைசியில் அர்ச்சனா சம்பந்தப்பட்ட கிளைமாக்ஸ் சீனும் மனதை உருக்கிவிடுகிறது. காந்தி என்ற கேரக்டரில் நடித்து இருப்பவர் பாலாஜிசக்திவேல். அவர் கண்ணாடியும் படத்தில் ஒரு விஷயத்தை சொல்கிறது. அதனால், படத்தின் தலைப்பு காந்தி கணக்கு.
நிஜ வாழ்க்கையில் உதவ வேண்டும். மற்றவர்கள் கஷ்டத்தில் பங்கு பெற வேண்டும் என்ற நிஜ குணம் கொண்ட கேபிஒய் பாலா படத்திலும் அந்த மாதிரி கேரக்டரில் நடித்துள்ளார். அந்த கதைக்கு பாலாஜிசக்திவேலும், அர்ச்சனாவும் உயிர் கொடுத்துள்ளனர். பாலா நடித்துஇருப்பதால் காமெடியாக இருக்கும், கலகலவென சிரிக்கலாம் என்று நினைத்தால் காந்தி கணக்கு வேறுமாதிரியான அனுபவத்தை தரும். நல்ல படம் பார்க்கலாம் என்று வந்தால் திருப்தி தரும்.
சிறப்பு செய்தியாளர் : மீனாட்சி சுந்தரம்