உ.பி மாநிலம் பரேலி சர்வதேச விமான நிலையத்தில் கேஎல்எம் ஏர்லைன்ஸ் அவசரமாக தரையிறங்கியதா? - வைரல் கூற்று உண்மையா?
This News Fact Checked by ‘PTI’
பரேலி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே கேஎல்எம் ஏர்லைன்ஸ் அவசரமாக தரையிறங்கியது என்று கூறி, ஓடுபாதையில் இருந்து விலகிச் செல்லும் விமானத்தின் காணொலி ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
இருப்பினும், PTI உண்மைச் சரிபார்ப்பு மையம் விசாரித்ததில், பரேலியில் சர்வதேச விமான நிலையம் இல்லாததால், இந்த வைரல் காணொலி சமூக ஊடகங்களில் தவறான கூற்றுடன் பகிரப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும் விசாரணையில், இந்த வைரல் காணொலி 2024 ஆம் ஆண்டுக்கு முந்தையது என்பது கண்டறியப்பட்டது. அப்போது KLM ஏர்லைன்ஸ் ஒஸ்லோ டோர்ப் சாண்டெஃப்ஜோர்டு விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு ஓடுபாதை 18 இன் வலது பக்கத்திலிருந்து விலகிச் சென்ற பழைய செய்தி என கண்டறியப்பட்டது.
வைரல் கூற்று :
மார்ச் 13 அன்று, 'ASLI BAREILLY' என்ற இன்ஸ்டாகிராம் பயனர் ஒரு விமானத்தின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில் நேற்று இரவு பரேலி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் ஒரு KLM விமானம் பயங்கரமான சப்தத்துடன் அவசரமாக தரையிறங்கியதாக தெரிவித்திருந்தார்
வீடியோவின் மேல் பகுதியில் "பரேலி சர்வதேச விமான நிலையம் அருகே விமானம் விபத்துக்குள்ளானது" என்று எழுதப்பட்டிருந்தது.
இருப்பினும், அந்தப் பதிவின் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “நேற்று இரவு பரேலி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ஒரு KLM விமானம் பயங்கரமான அவசர தரையிறங்கியது. பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் ஓடுபாதையை விட்டு விலகி ஒரு கரடுமுரடான நிலப்பரப்பில் தரையிறங்கியது. அவசர கதவுகளின் வழியே அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். சிலருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டிருந்தாலும் உயிரிழப்புகள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதோ அதற்கான இணைப்பு , கீழே அதன் ஸ்கிரீன்ஷாட் உள்ளது.
உண்மை சரிபார்ப்பு :
வைரலாகும் செய்தியை குறித்த உண்மை சரிபார்க்க, டெஸ்க் முதலில் வைரல் பதிவில் கூறப்பட்ட கூற்றை கவனமாக பகுப்பாய்வு செய்து, 'பரேலி சர்வதேச விமான நிலையம்' என்று எழுதப்பட்டிருப்பதைக் கண்டறிந்தது, இருப்பினும், பரேலியில் சர்வதேச விமான நிலையம் இல்லை. பரேலி விமான நிலையம் பரேலி விமானப்படை நிலையம் அல்லது திரிசூல் விமான தளம் என்றும் அழைக்கப்படுகிறது.
பரேலி விமான நிலையத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்ததா என்பதைக் கண்டறிய, டெஸ்க் தனிப்பயனாக்கப்பட்ட முக்கிய வார்த்தை தேடலை நடத்தியது, ஆனால் அந்த விவரங்களை உறுதிப்படுத்தும் எந்த தொடர்புடைய அறிக்கைகளையும் கிடைக்கவில்லை.
விசாரணையின் அடுத்த பகுதியில், டெஸ்க், வைரல் வீடியோவின் கீஃப்ரேம்களை ரிவர்ஸ் இமேஜ் தேடலின் மூலம் இயக்கியது, இதன் முடிவில் டிசம்பர் 29, 2024 தேதியிட்ட ஒரு பேஸ்புக் பதிவைக் கண்டது. வைரல் வீடியோவில் காணப்பட்டதைப் போன்ற காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தன. நார்வேயின் ஒஸ்லோவில் உள்ள டோர்ப் சாண்டெஃப்ஜோர்டு விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்ற ஒரு KLM விமானம் விபத்துக்குள்ளானதாக தலைப்பின் மொழிபெயர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"விபத்து நடந்தபோதிலும் பயணிகள் அல்லது பணியாளர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்," என்று அப்பதிவில் கூறப்பட்டது. அந்த பதிவிற்கான இணைப்பு இங்கே , அதன் ஸ்கிரீன்ஷாட் கீழே உள்ளது.
வைரல் காணொளிக்கும் பேஸ்புக் பதிவிற்கும் இடையிலான ஒற்றுமைகளை எடுத்துக்காட்டும் ஸ்கிரீன்ஷாட் கீழே உள்ளது.
விசாரணையின் அடுத்த பகுதியில், டெஸ்க் தனிப்பயனாக்கப்பட்ட முக்கிய வார்த்தை தேடலை நடத்தியது, அதில் டிசம்பர் 29, 2024 தேதியிட்ட விமானப் பாதுகாப்பு வலையமைப்பின் (ASN) X பதிவின் ஒரு பகுதியைக் கண்டறிந்தது. அந்த இடுகையின் தலைப்பு: “KLM விமானம் #KL1204, போயிங் 737-800, ஒஸ்லோ டோர்ப் சாண்டெஃப்ஜோர்டு விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு ஓடுபாதை 18 இன் வலது பக்கத்திலிருந்து விலகிச் சென்றது. ஒஸ்லோ விமான நிலையத்திலிருந்து (OSL) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் அங்கு திருப்பி விடப்பட்டது.” எனக் குறிப்பிட்டிருந்தது.
அந்த பதிவிற்கான இணைப்பு இங்கே , அதன் ஸ்கிரீன்ஷாட் கீழே உள்ளது.
பின்னர், வைரலான காணொலி 2024 ஆம் ஆண்டுக்கு முந்தையது என்று டெஸ்க் முடிவு செய்தது. KLM ஏர்லைன்ஸ் தரையிறங்கியது பரேலி சர்வதேச விமான நிலையத்தில் அல்ல, மாறாக ஒஸ்லோ டோர்ப் சாண்டெஃப்ஜோர்டு விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு ஓடுபாதை 18 இன் வலது பக்கத்திலிருந்து விலகிச் சென்றது என்பது உறுதியாகிறது.
முடிவுரை :
பரேலி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே அவசரமாக தரையிறங்கிய விமானம் KLM ஏர்லைன்ஸ் என்று கூறி, சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் செல்லும் காணொலி பகிரப்பட்டது. பிடிஐ விசாரணையில், இந்த வைரல் காணொலி 2024 ஆம் ஆண்டுக்கு முந்தையது என்றும், KLM ஏர்லைன்ஸ் ஒஸ்லோ டோர்ப் சாண்டெஃப்ஜோர்டு விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு ஓடுபாதை 18 இன் வலது பக்கத்திலிருந்து விலகிச் சென்றது என்றும் டெஸ்க் கண்டறிந்துள்ளது.
This story was originally published by ‘PTI’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.