இந்தியா கூட்டணி வென்றால் பிரதமர் ஆகத் தயார் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினாரா? உண்மை என்ன?
This News Fact Checked by 'Fact Crescendo Malayalam'
மனோரமா செய்தி நிறுவனத்தின் போலி செய்தி அட்டையை பயன்படுத்தி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பெயரில் போலியான அறிக்கையை பரப்பப்பட்டது அம்பலமாகியுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலின் ஏழாவது கட்ட வாக்குப்பதிவு இன்றுடன் (ஜூன் 1ம் தேதி) நிறைவடைகிறது. ஏறக்குறைய ஒரு மாதமாக, ஜூன் 4 தேர்தல் வரவுள்ள முடிவுகளுக்காக முழு நாடும் காத்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையேதான் முக்கிய போட்டி நிலவுகிறது. பிரதமர் யார் என்பது குறித்து இரு கட்சியினரிடையேயும் அவ்வப்போது பேச்சு எழுந்து வருகிறது. இதற்கிடையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமராக விருப்பம் தெரிவித்தது போல் பிரசாரம் நடப்பது கவனம் பெற்றது.
மனோரமா நியூஸ் என்ற பெயரில் ஒரு செய்தி அட்டை பரப்பப்படுகிறது. அதில் முதல்வர் பினராயி விஜயனின் படத்துடன், அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. பினராயி விஜயன் பிரதமராக விருப்பம் தெரிவித்தது போல் குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்களது கட்சியில் யார் யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த பதிவு தொடர்பான Fact Crescendo விசாரணையில், போலி செய்தி அட்டைகள் போலியான பிரச்சாரத்தை பரப்புவதற்கு பயன்படுத்தப்படுவதாகக் கண்டறியப்பட்டது.
இதுதான் உண்மை:
இந்த பிரசாரத்தின் உண்மை நிலையை அறிய மனோரமா நியூஸ் சேனலை முதலில் தொடர்பு கொண்டோம். மனோரமா நியூஸ் பெயரை தவறாக பயன்படுத்தி பொய் பிரசாரம் செய்து வருவதாக செய்தித்துறை தெரிவித்துள்ளது. “நியூஸ் கார்டைப் பார்த்தால் அதில் மனோரமா ஆன்லைன் லோகோ இருக்கும். அதனுடன் மனோரமா சேனல் இணையதளத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மனோரமா ஆன்லைனிலோ, நியூஸ் சேனலிலோ பிரதமராகத் தயார் என்று பினராயி விஜயன் கூறியதாக நாங்கள் தெரிவிக்கவில்லை” என்று மனோரமா நியூஸ் சேனல் தரப்பில் தெரிவிக்கபட்டது.
மனோரமா நியூஸ் சேனலின் லோகோ: மனோரமா ஆன்லைன் லோகோவில் இருந்து வேறுபட்டிருக்கும் நிலையில் போலியாக பரப்பப்பட்ட அட்டையில் அது தவறாக பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.
இதன் வாயிலாக முதல்வர் பினராயி விஜயன் பெயரில் பொய் பிரசாரம் நடப்பது விசாரணையில் தெரிகிறது.
முடிவுரை:
இந்தியா கூட்டணி வென்றால் பிரதமர் ஆகத் தயார் என முதல்வர் பினராயி விஜயன் கூறியதாக வெளியான மனோரமா நியூஸ் நிறுவனத்தின் செய்தி அட்டை போலியானது. மனோரமாவின் போலி செய்தி அட்டை தயாரிக்கப்பட்டு, முதல்வர் பெயரில் ஒரு போலி அறிக்கை பரப்பப்படுகிறது.
Note : This story was originally published by ‘Fact Crescendo Malayalam’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.