“நான் நிர்மலா சீதாராமனை சந்தித்தேனா?” - சீமான் அளித்த பரபரப்பு பதில்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,
“கச்சத்தீவு என்பது தமிழக மீனவர்களின் பிரச்னை அல்ல. இந்தியாவின் பிரச்னை. இது அவர்களுக்கான வாழ்வுரிமை பிரச்னை என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். கச்சத்தீவு குறித்து பிரதமர் பேசியிருக்க வேண்டும் என்பது அனைவரின் எண்ணம்.
மீனவர்கள் என்பது பிரச்னை இல்லை, தமிழர்கள் என்பதே பிரச்னை. நாட்டில் பல பிரச்னைகள் உள்ள நிலையில் வக்ஃபு வாரியத்தில் கவனம் செலுத்த வேண்டியதில்லை. இதைவிட கோடி பிரச்னைகள் உள்ளன. அவற்றிலேயே ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
என் கால்களை நம்பியே என் பயணத்தை நான் தொடங்கியுள்ளேன். ரஜினி கட்சி வைத்திருக்கவில்லை அவருடன் கூட்டணி வைக்க. நிதியமைச்சரை சந்தித்தால் சந்தித்தேன் என சொல்கிறேன். சந்தித்துவிட்டு சொல்கிறேன்” என தெரிவித்தார்.