ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலின் அனல்மின் நிலையத்தை தாக்கினார்களா? - வைரலாகும் வீடியோ | உண்மை என்ன?
This News Fact Checked by ‘Newsmeter’
ஹூதி கிளர்ச்சியாளர்களால் இஸ்ரேலின் அஷ்கெலோன் மின் உற்பத்தி நிலையத்தில் பெரிய தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலானது. இது தொடர்பாக உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.
இஸ்ரேலின் அஷ்கெலோன் அனல்மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதைக் காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஒரு X பயனர் இந்த வீடியோவைப் பகிர்ந்து "மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல்: அஷ்கெலோன் நிலையத்தின் தீவிபத்து அரம்கோவின் நாட்களை நமக்கு நினைவூட்டுகிறது. இஸ்ரேல் இருளில் மூழ்கப் போகிறது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
சமூக வலைதளங்களில் வெளியான இந்த 11-வினாடி கிளிப் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து பெரிய தீப்பிழம்புகள் எழுவதைக் காட்டுகிறது.
உண்மை சரிபார்ப்பு :
வைரலாக பரவும் வீடியோவை நியூஸ்மீட்டர் ஆய்வு செய்தபோது அந்தக் கூற்று தவறானது என்பதைக் கண்டறிந்தது. அந்த வீடியோ பழையது மற்றும் சவுதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள அரம்கோ எண்ணெய் ஆலையில் தீ விபத்து ஏற்பட்ட பழைய வீடியோ என்பதை கண்டறிந்தது. மார்ச் 26, 2022 அன்று அல் அரேபியாவின் வீடியோ அறிக்கையில் யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோவை கூகுள் ரிவர்ஸ் தேடுதலுக்கு உட்படுத்தியபோது வீடியோவுக்கு இட்டுச் சென்றது. வீடியோவில் உள்ள வாசகம்: 'ஜித்தாவில் உள்ள அரம்கோ ஸ்டேஷனில் தீவிபத்திற்கு பிறகான காட்சிகள்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
வைரலான வீடியோ அல் அரேபியா அறிக்கையின் காட்சிகளுடன் நெருக்கமாக பொருந்துகிறது, இது ஹூதி அமைப்புகளில் தாக்குதலுக்கு பிறகு ஜித்தாவில் உள்ள சவுதி அராம்கோவின் எண்ணெய் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது என்பதை உறுதிப்படுத்தியது.
மேலும் இது தொடர்பாக முக்கிய தேடலுக்கு உட்படுத்தியபோது மார்ச் 25, 2002 தேதியிட்ட 'சவூதி அரேபியா கிராண்ட் பிரிக்ஸுக்கு முன் ஜித்தா எண்ணெய் கிடங்கில் தீ விபத்து' என்ற கார்டியன் அறிக்கை கிடைத்தது.
யேமன் நாட்டைச் சார்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலால் சவுதி கிராண்ட் பிரிக்ஸுக்கு சில நாட்களுக்கு முன்பு எண்ணெய் கிடங்கில் தீ விபத்து நடைபெற்றது என்று கட்டுரை தெரிவிக்கிறது. இருப்பிடத்தை உறுதிப்படுத்தும் அதே போன்ற படங்கள் இந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. ராய்ட்டர்ஸ் மற்றும் சிஎன்பிசியின் அறிக்கை, காட்சிகள் ஜித்தாவில் உள்ள அராம்கோ நிறுவனத்திலிருந்து வெளியானவை என்றும் இஸ்ரேலின் அஷ்கெலோன் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து அல்ல என்பதை உறுதிப்படுத்தியது.
எனவே, அந்த வீடியோவில் இஸ்ரேலின் அஷ்கெலோன் மின் உற்பத்தி நிலையம் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வைரலானது தவறானது. இந்த வீடியோ மார்ச் 2022 இல் இருந்து, ஹூதி ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு ஜித்தாவில் உள்ள சவுதி அராம்கோவின் எண்ணெய்க் கிடங்கில் தீப்பிடித்ததைக் காட்டுகிறது.
முடிவு :
ஹூதி கிளர்ச்சியாளர்களால் இஸ்ரேலின் அஷ்கெலோன் மின் உற்பத்தி நிலையத்தில் பெரிய தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலானது. உண்மைத் தன்மையை ஆய்வு செய்ததில் இது மார்ச் 2022ம் ஆண்டு ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலைத் தொடர்ந்து சவுதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள அரம்கோ எண்ணெய் ஆலையில் தீப்பிடித்த என கண்டறியப்பட்டுள்ளது.
Note : This story was originally published by ‘Newsmeter’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.