For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தனது Biopic ஐ தயாரிப்பதற்காக ராக்கிங் ராகேஷுக்கு தெலங்கானா முன்னாள் முதல்வர் KCR ரூ.20கோடி பணம் கொடுத்தாரா ? - வைரலான செய்தி உண்மையா?

01:10 PM Nov 30, 2024 IST | Web Editor
தனது biopic ஐ தயாரிப்பதற்காக ராக்கிங் ராகேஷுக்கு தெலங்கானா முன்னாள் முதல்வர் kcr ரூ 20கோடி பணம் கொடுத்தாரா     வைரலான செய்தி உண்மையா
Advertisement

This news Fact Checked by ‘Newsmeter

Advertisement

ஜபர்தஸ்த்' ராக்கிங் ராகேஷ், ஒரு பேட்டியில், முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர் ராவை பெருமைப்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்ட படத்திற்கு அவர் பண்ணை வீட்டில் 20 கோடி ரூபாய் கொடுத்ததாகக் கூறினார் சமூக வலைதளங்களில் பேப்பர் க்ளிப்பிங் வைரலானது. இதுகுறித்து உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.

கேசவ சந்திர ராமாவத் (KCR) என்ற தெலுங்கு திரைப்படம் நவம்பர் 22 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. தெலங்கானா மாநிலத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் என்பதால் 'கேசிஆர்' என்ற தலைப்பின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்க்க முயன்றது. அதேபோல கே.சி.ஆர் என்பது தெலங்கானா முன்னாள் முதலமைச்சரும் பி.ஆர்.எஸ் கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ் உடைய பெயர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியின் போது, நகைச்சுவை நிகழ்ச்சியான 'ஜபர்தஸ்த்' நடிகர் ராக்கிங் ராகேஷ் மற்றும் படத்தின் தயாரிப்பாளரும் படத்தை 'கேசிஆர்-க்கு அர்ப்பணிக்கப்பட்ட கதை என்று அழைத்தனர். படம் வெளியானதும், ராக்கிங் ராகேஷ் ஒரு பேட்டி அளிப்பது போன்ற ஒரு செய்தித்தாள் கிளிப்பிங் வைரலானது. அந்த பேட்டியில் அரசியல் தலைவரின் வாழ்க்கையை பெருமைப்படுத்தும் திரைப்படத்தை தயாரிப்பதற்காக ராக்கிங் ராகேஷ், கே.சி.ஆரிடம் இருந்து ரூ.20 கோடியை பண்ணை வீட்டில் பெற்றதாக ஒப்புக்கொண்டதாக கூறுகிறது.

ஒரு எக்ஸ் பயனர் இந்த செய்தித்தாள் கிளிப்பிங்கைப் பகிர்ந்து கே.சி.ஆர் சட்டமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் 20 கோடி ரூபாய் செலவழித்து தன்னைப் பற்றி பற்றி படம் எடுத்துக் கொள்கிறார் என்றும் தனது தொகுதி மக்களின் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் எடுத்துச் சொல்வதை புறக்கணித்தார் என்று குற்றம் சாட்டினார். மேலும் பேட்டியின்படி, சரியான கதை இல்லாததால் பலர் இடைவேளைக்கு முன்பே தியேட்டர்களை விட்டு வெளியேறினர் என்றும், இப்படத்தில் கே.சி.ஆரை பெருமைப்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தியதாகவும் ராகேஷ் ஒப்புக்கொண்டார். இந்தப் படத்தில் தனக்கு எந்தவிதமான நிதிப் பங்குகளும் இல்லை என்றும், எதிர்காலத்தில் அரசியல் விஷயங்களைத் தவிர்ப்பேன் என்றும் ராகேஷ் கூறியதாகவும் அந்த பேட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


உண்மை சரிபார்ப்பு :

சமூக வலைதளங்களில் வைரலான பதிவு குறித்து ஆய்வு நடத்திய நியூஸ்மீட்டர் இந்த கூற்று தவறானது என்று கண்டறிந்துள்ளது மேலும் செய்தித்தாள் கிளிப்பிங் போலியானது என்று கண்டுபிடித்துள்ளது. செய்தித்தாளை உற்றுக் கவனித்தால் செய்தித்தாள் கிளிப்பிங்கின் கீழே தெலுங்கானா நியூஸ் டுடே என்ற லோகோ இருந்தது. மேலும் அதன் இ-பேப்பரின் இணைப்பும் இருந்தது. இதனை ஆய்வு செய்தபோது அத்தகைய செய்தித்தாள் அல்லது இணையதளம் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் இந்த இணைப்பில் உள்ள லிங்க் எந்த இணையதளத்தையும் காட்டவில்லை அதேபோல தெலங்கானாவில் அந்த பெயரில் எந்த செய்தித்தாள்களும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

அதேபோல வைரலான க்ளிப்பிங்கின் கீழே வலதுபுறத்தில், ஆந்தையின் கிராஃபிக் படத்தைக் கவனித்தோம், இது ஆன்லைனில் யார் வேண்டுமானாலும் எழுதுவதையும், திருத்துவதையும் மேற்கொள்ளும் இணையதளத்தின் லோகோவாகும். இந்த தளத்தின் மூலம் உண்மையான செய்திக் கட்டுரையை போல ஆவணத்தை வடிவமைத்து போலி செய்தித்தாள் கிளிப்பிங் உருவாக்கப்பட்டது.

இதேபோல ராகேஷின் சமூக ஊடக சுயவிவரங்களையும் நாங்கள் பார்த்தோம், மேலும் கூறப்படும் நேர்காணல் பற்றிய இடுகைகள் எதுவும் இல்லை. அவரது சமீபத்திய பதிவுகள் அவரது படத்தை விளம்பரப்படுத்துவது பற்றி மட்டுமே இருந்தன. நியூஸ்மீட்டர் ராக்கிங் ராகேஷை அணுகியபோது, அவர் அப்படி ஒரு பேட்டி கொடுக்கவில்லை என்று மறுத்தார். மேலும் அவர், "கேசிஆர் எனக்கு ரூ.20 கோடி கொடுத்தால், எனது படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காமல் நான் ஏன் போராடுவேன்? அது உண்மையாக இருந்திருந்தால், பாலகம் படத்திற்கு செய்தது போல் கேடிஆர் அல்லது தில் ராஜு என விளம்பரப்படுத்தியிருப்பார்கள். இதன் மூலம் கே.சி.ஆர் திரைப்படத்திற்கு நிதியுதவி செய்ததாக வைரலான செய்தித்தாள் கிளிப்பிங் போலியானது என்று முடிவு செய்கிறோம்.

முடிவு:

ஜபர்தஸ்த்' ராக்கிங் ராகேஷ், ஒரு பேட்டியில், முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர் ராவை பெருமைப்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்ட படத்திற்கு அவர் பண்ணை வீட்டில் 20 கோடி ரூபாய் கொடுத்ததாகக் கூறினார் சமூக வலைதளங்களில் பேப்பர் க்ளிப்பிங் வைரலானது. இதுகுறித்து நியூஸ் மீட்டர் நடத்திய ஆய்வில் கூற்று பொய்யானது என்றும் செய்தித்தாள் கிளிப்பிங் போலியானது என்றும் உறுதியாகிறது.

Note : This story was originally published by  ‘Newsmeter and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement