கனடா அதிபர் பதவிக்கு வேட்புமனுவை தாக்கல் செய்த சந்திரா ஆர்யா கன்னடத்தில் பேசினாரா? - Fact Check
This News Fact Checked by ‘Newsmeter’
கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவருக்குப் பின் பல முக்கிய தலைவர்கள் போட்டியிட்டனர். அவர்களில் இந்திய வம்சாவளியான கன்னடிகா சந்திர ஆர்யாவும் ஒருவர்.அவர் ஜனவரி 9 ஆம் தேதி பிரதமர் பதவிக்கு அதிகாரப்பூர்வமாக வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்த சூழலில், பல ஊடக அறிக்கைகள், குறிப்பாக கன்னடத்தில், சமூக ஊடக இடுகைகளுடன், சந்திரா ஆர்யா கன்னடத்தில் பேசும் விடியோவைப் பகிர்ந்து கனடாவின் பிரதமர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த பிறகு ஆர்யா கன்னடத்தில் தனது கருத்துக்களை வெளியிட்டதாக பகிர்ந்திருந்தனர். அந்த வீடியோவில் ஆர்யா கூறுகையில்,
” கனடா நாடாளுமன்றத்தில் எனது தாய்மொழியான கன்னடத்தில் பேச வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டத்தில் உள்ள சிரா தாலுகாவைச் சேர்ந்த ஒருவர் கனடாவில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கன்னடத்தில் பேசியது சுமார் ஐந்து கோடி கன்னடர்களுக்கு பெருமை சேர்க்கும் தருணம். கனடாவில் உள்ள கன்னட சமூகம் 2018 ஆம் ஆண்டு இந்த அவையில் கன்னட ராஜ்யோத்சவாவை கொண்டாடியது. நமது தேசிய கவிஞர் குவேம்பு மற்றும் பழம்பெரும் நடிகர் டாக்டர் ராஜ்குமார் எழுதிய வரிகளை நான் வாசித்து எனது உரையை முடித்துக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜனவரி 17 அன்று, செய்தி ஊடகமான நியூஸ்ஃபர்ஸ்ட் லைவ், சந்திரா ஆர்யா கன்னடத்தில் பேசி வேட்புமனு தாக்கல் செய்ததாக செய்தி வெளியிட்டது. கர்நாடகாவின் மற்றொரு முக்கிய ஊடக அமைப்பான கன்னட பிரபா, கனேடிய பிரதமர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் போது ஆர்யா கன்னடத்தில் பேசியதாக தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. இந்தியன் டெக் & இன்ஃப்ராவின் எக்ஸ் தளத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துகொண்டு, "கனடாவின் அடுத்த பிரதமராக பதவியேற்பதற்கான போட்டியில் கனேடிய எம்பி சந்திரா ஆர்யா அதிகாரப்பூர்வமாக வேட்புமனு தாக்கல் செய்த பிறகு கன்னடத்தில் பேசுகிறார்" என்று எழுதப்பட்டிருந்தது.
உண்மை சரிபார்ப்பு :
நியூஸ்மீட்டர் இந்த கூற்று தவறானது என்று கண்டறிந்துள்ளது. 2022ஆம் ஆண்டு கனடா நாடாளுமன்றத்தில் சந்திரா ஆர்யா கன்னடத்தில் உரை நிகழ்த்திய வீடியோ இது எனவும் உறுதிப்படுத்தியுள்ளது. வைரலாகும் வீடியோ தொடர்பாக நாங்கள் முக்கிய வார்த்தைகளை தேடினோம். ஆனால் பிரதமர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் போது அல்லது தாக்கல் செய்த பிறகு ஆர்யா கன்னடத்தில் பேசிய வீடியோக்கள் அல்லது ஊடக அறிக்கைகள் எதுவும் கிடைக்கவில்லை.
மேலும் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தியபோது ஜனவரி 13, 2025 அன்று NDTV வெளியிட்ட வைரலான வீடியோவைக கண்டோம் இது 'கன்னடத்தில் சந்திர ஆர்யாவின் பழைய நாடாளுமன்றப் பேச்சினை மே 20, 2022 அன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட வீடியோவையும் நாங்கள் கண்டோம் இந்தியாவில் பிறந்த எம்.பி. சந்திரா ஆர்யாவின் கன்னடப் பேச்சு கனேடிய நாடாளுமன்றத்தில் திகைக்க வைத்தது எனும் தலைப்பில் அப்போது வீடியோ வைரலாகின.
கனடாவின் கீழ்சபையான ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் நேபியன் ஒன்டாரியோவின் தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆர்யா, தனது தாய்மொழியான கன்னடத்தில் உரை நிகழ்த்தியதாக அந்த சேனல் செய்தி வெளியிட்டது. இந்தியாவுக்கு வெளியே எந்த நாடாளுமன்றத்திலும் கன்னடம் பேசப்படுவது இதுவே முதல்முறை என்று அவர் உரையின் போது குறிப்பிட்டார். கனடா நாடாளுமன்றத்தில் ஆர்யா பேசிய வீடியோ வைரலானதையடுத்து அரசியல்வாதிகள் உட்பட நெட்டிசன்கள் ஆர்யாவை பாராட்டினர்.
I spoke in my mother tongue (first language) Kannada in Canadian parliament.
This beautiful language has long history and is spoken by about 50 million people.
This is the first time Kannada is spoken in any parliament in the world outside of India. pic.twitter.com/AUanNlkETT— Chandra Arya (@AryaCanada) May 19, 2022
இதனைத் தொடர்ந்து மே 20, 2022 அன்று ஆர்யா தனது அதிகாரப்பூர்வ X கணக்கிலிருந்து வெளியிட்ட வீடியோவையும் நாங்கள் கண்டோம். "கனேடிய நாடாளுமன்றத்தில் எனது தாய்மொழியான கன்னடத்தில் பேசினேன். இந்த அழகான மொழி நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது, சுமார் 50 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இந்தியாவுக்கு வெளியே உலகின் பிற பாராளுமன்றத்தில் கன்னடம் பேசப்படுவது இதுவே முதல் முறை" என்று பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
2022 ஆம் ஆண்டு தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, பிசினஸ் டுடே மற்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆகியவற்றின் அறிக்கைகளையும் நாங்கள் கண்டோம்,கன்னட பாராளுமன்றத்தில் ஆர்யா கன்னடத்தில் எம்.பி.யாக பேசியிருந்தார். எனவே, சந்திரா ஆர்யா கன்னடத்தில் பேசும் கை வைரலான வீடியோ 2022 ஆம் ஆண்டு வெளியானது மாறாக 2025 ஆம் ஆண்டு கனேடிய பிரதமர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த பிறகு இல்லை என்றும் முடிவு செய்கிறோம்.
முடிவு :
கனடா அதிபர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த இந்திய வம்சாவளியான சந்திரா ஆர்யா கன்னடத்தில் பேசியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. இதுகுறித்து நியூஸ்மீட்டர் நடத்திய ஆய்வில் சந்திரா ஆர்யா கன்னடத்தில் பேசும் கை வைரலான வீடியோ 2022 ஆம் ஆண்டு வெளியானது மாறாக 2025 ஆம் ஆண்டு கனேடிய பிரதமர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த பிறகு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
Note : This story was originally published by ‘Newsmeter’and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.