பாஜகவின் பிரசாரப் பொருட்களில் தங்க பிஸ்கட்கள் இருந்ததா? உண்மை என்ன?
This News Fact Checked by Fact Crescendo Malayalam
பாஜகவின் பிரச்சாரப் பொருட்களில் தங்க பிஸ்கட்கள் கிடைத்ததாகப் பொய்யான தகவல் பரப்பப்பட்டது அம்பலமாகியுள்ளது.
பாஜக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட தங்க பிஸ்கட்களை போலீஸார் கைப்பற்றியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால் இந்த வீடியோவில் இருப்பது தங்க பிஸ்கட் அல்ல என்பது எங்கள் விசாரணையில் தெரியவந்தது. இந்த காணொளியின் உண்மை நிலை என்ன என்று பார்ப்போம்.
https://108.181.32.55/details/scrnli_14_05_2024_17-57-14?__cpo=aHR0cHM6Ly9hcmNoaXZlLm9yZw
பிரசாரம்:
மேலே உள்ள பதிவில் ஒரு காணொளியை பார்க்கலாம். பா.ஜ.க.வின் பிரசாரத்துக்காக பொருட்கள் நிரம்பிய பெட்டிகளை அவர் ஆய்வு செய்வதை வீடியோவில் பார்க்கிறோம். வீடியோவில் மராத்தியில் உரையாடலையும் நாம் கேட்கலாம். வீடியோ மராத்தியில் உள்ளது: “ சரிபார் ! யாருக்கும் பயப்படாமல் சரிபார்க்கவும்! அது ஒரு தங்க பிஸ்கட்! " என்று சிலர் கூறுவது அந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கும்.
ஆனால் பெட்டியில் கிடைத்தது உண்மையில் தங்க பிஸ்கட்டா? என்று Fact Crescendo Malayalam தரப்பில் விசாரணை நடத்தப்பட்டது.
உண்மை கண்டறிதல்:
நிகழ்வோடு தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். இந்த சம்பவம் குறித்து என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியை கீழே காணலாம்.
காணொளியில் கேட்ட தங்க பிஸ்கட் என்ற வார்த்தை உண்மையில் கோபத்தில் காவல் நிலையத்தில் இருந்த பாஜக பிரமுகரே கூறியதுதான் என செய்தியாளர் தெளிவுபடுத்துகிறார். இந்த வார்த்தையை கேட்டவுடன் இந்த வதந்திகள் கிளம்பியிருக்கலாம் என்றும் செய்தியாளர் தெளிவுபடுத்துகிறார்.
இந்த வீடியோ குறித்து மும்பை செய்தியாளர்களிடம் பேசிய முலுண்ட் பிரிவு டி.சி.பி. புருஷோத்தம் காரட் கூறுகையில், “தங்க பிஸ்கட் இருக்கும் என ஆய்வின் போது ஆர்வலர்கள் சிலர் தெரிவித்தனர். ஆனால் சோதனையின் போது பிரசார பொருட்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது.
வீடியோவில் காணப்பட்ட பொருள் உண்மையில் வாசனை திரவியம் என்று பாஜக தலைவர் அஜய் பட்குஜர் தெளிவுபடுத்தினார். போலீசார் நிறுத்திய கார் புட்குஜாருக்கு சொந்தமானது. இந்த வீடியோ குறித்து என்டிடிவி செய்தியாளரிடம் அவர் கூறியதாவது: எனது குடும்பத்தினர் பயணம் செய்த வாகனத்தை தேர்தல் குழுவினர் தடுத்து நிறுத்தினர். அந்த வாகனத்தில் கட்சி பிரச்சாரப் பொருட்கள் அடங்கிய பெட்டி இருந்தது. இந்த பெட்டியில் அனைத்து தொழிலாளர்களுக்கும் கொடுக்க ஒரு கிட் இருந்தது. அதன் பிறகு அவர் கிட் திறக்கிறார்.
இந்த கிட்டில் பாஜகவின் பிரசாரத்திற்கான பொருட்கள் உள்ளன. இந்த காணொளியில் பிரதமரின் முகமூடிகள், கோப்பைகள், ஸ்டிக்கர்கள் என பலவற்றை பார்க்கலாம். பின்னர் அவர் வீடியோவில் தங்க பிஸ்கட் என்று கூறுவதைக் காட்டுகிறார். இந்த பொருள் உண்மையில் வாசனை திரவியம் என்று புட்குஜர் வீடியோவில் விளக்குகிறார்.
முடிவுரை
பாஜக வாக்காளர்களுக்கு கடத்தப்பட்ட தங்க பிஸ்கட்டுகளை போலீசார் கைப்பற்றியதாக பரப்பப்படும் பரப்புரை பொய் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தக் காட்சிகளில் காணப்படுவது தங்க பிஸ்கட் அல்ல, வாசனை திரவியம்.
Note : This story was originally published by ‘Fact Crescendo Malayalam’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakthi Collective.