For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அஜ்மீர் தர்கா குறித்து கருத்து தெரிவித்ததால் பாஜக தலைவர் மேடையில் மயங்கி விழுந்தாரா? | Fact Check

01:39 PM Dec 30, 2024 IST | Web Editor
அஜ்மீர் தர்கா குறித்து கருத்து தெரிவித்ததால் பாஜக தலைவர் மேடையில் மயங்கி விழுந்தாரா    fact check
Advertisement

This news Fact Checked by ‘AajTak

Advertisement

அஜ்மீர் சர்ச்சையில் தவறாக பேசியதால் மேடையிலிருந்து காவித் துண்டு அணிந்த பாஜக தலைவர் மயங்கி விழுந்ததாக சமூக வளைதளங்களில் வீடியோ வைரலானது.

சமீபத்தில், வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 ஐ விசாரித்த உச்ச நீதிமன்றம், கோவில்கள் மற்றும் மசூதிகள் தொடர்பான புதிய வழக்குகளைத் தாக்கல் செய்ய தடை விதித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அஜ்மீர் தர்காவுடன் தொடர்புடைய முக்கிய நபர்கள் மற்றும் மதத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இந்நிலையில், காவி சால்வை அணிந்து மேடையில் நின்ற ஒருவர் திடீரென கீழே விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அருகில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் அவரை கைதாங்க பிடித்தனர். அந்த வீடியோவில், "தர்காவை ஆய்வு செய்ய சென்றிருந்தோம், எங்கள் கணக்கெடுப்பு முடிந்தது. நிச்சயமாக ராஜா என் க்வாஜா" என்று கூறினார்.

இந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த ஒருவர், "ஹஸ்ரத் குவாஜா கரீப் நவாஸ் இந்தியாவின் ராஜா மட்டுமல்ல, முழு ஆசியாவின் ராஜாவும் ஆவார். இது வெறும் ஆரம்பம்தான் “ அதன் வீடியோவை இங்கே காணலாம்.

இந்த வீடியோ குறித்த ஆய்வு செய்தபோது 2021-ம் ஆண்டு குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி பேசும் போது திடீரென தலைசுற்றல் காரணமாக கீழே விழுந்த வீடியோ என்று ஆஜ் தக் உண்மைச் சரிபார்ப்பு கண்டறிந்தது. இந்த வீடியோவிற்கும் தற்போதைய அஜ்மீர் சர்ச்சைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதியாகிறது.

உண்மை சரிபார்ப்பு :

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவின் கீஃப்ரேம்களைத் கூகுள் ரிவர்ஸ் இமேஜில் தேடியதில், இது தொடர்பான செய்தி அறிக்கை கிடைத்தது. பிப்ரவரி 14, 2021 இன் இந்தச் செய்தியில், குஜராத்தின் வதோதரா நகரில் விஜய் ரூபானி பேசும்போது மேடையில் மயங்கி விழுந்ததாகக் கூறப்பட்டுள்ளது. நகராட்சித் தேர்தல்கள் பிப்ரவரி 21, 2021 அன்று நடைபெற இருந்தது. தேர்தல் பிரசாரத்தின் போது, வதோதராவின் நிஜாம்புராவில் பொதுமக்களிடம் பேசுவதற்காக விஜய் ரூபானி சென்றிருந்தார். தார்சாலி மற்றும் கரேலிபாக்க்குப் பிறகு, வதோதராவின் நிஜாம்புராவில் விஜய் ரூபானியின் மூன்றாவது பேரணி இதுவாகும்.

பேச்சின் போது தலைசுற்றல் காரணமாக மேடையிலேயே விஜய் ரூபானி கீழே விழுந்தார் இதைப் பார்த்த அவரது மெய்க்காப்பாளர் மற்றும் நிகழ்ச்சியில் இருந்த மற்ற தலைவர்கள் அவரைக் கைதாங்க பிடித்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, ஹெலிகாப்டரில் விஜய் ரூபானி அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சைக்கு பின், பிபி மற்றும் சோர்வு காரணமாக மேடையிலேயே விஜய் மயங்கி விழுந்தது தெரியவந்தது. மேலும், பிப்ரவரி 15, 2021 அன்று வெளியிடப்பட்ட செய்தியில்,விஜய் ரூபானியும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் விஜய் ரூபானி இந்த முழு உரையையும் தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பினார் . இதில், 14:50 நேரத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்ததைக் காணலாம்.

விஜய் ரூபானி சமீபத்தில் அஜ்மீர் தர்காவைப் பற்றி ட்வீட் செய்யவில்லை அல்லது இந்த பிரச்சினை தொடர்பான அவரது அறிக்கைகள் குறித்து வெளியிடப்பட்ட எந்த செய்தியையும் நாங்கள் காணவில்லை என்பதை உறுதியாகியுள்ளாது. 2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜய் மயங்கி விழுந்த பழைய வீடியோ சமீபத்திய அஜ்மீர் சர்ச்சையின் பின்னணியில் பகிரப்பட்டுள்ளது தெளிவாகிறது.

முடிவு :

அஜ்மீர் சர்ச்சையில் தவறாக பேசியதால் மேடையிலிருந்து பாஜக தலைவர் மயங்கி விழுந்ததக சமூக வளைதளங்களில் வீடியோ வைரலானது. இது உண்மையில் 2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மயங்கி விழுந்த பழைய வீடியோ சமீபத்திய அஜ்மீர் சர்ச்சையின் பின்னணியில் பகிரப்பட்டுள்ளது தெளிவாகிறது.

Note : This story was originally published by ‘AajTak and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement