Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வக்ஃப் திருத்த மசோதாவிற்கு எதிராக போராடியவர்கள் மீது பீகார் போலீஸ் தடியடி நடத்தியதா? - வைரலாகும் வீடியோ | உண்மை என்ன?

04:38 PM Dec 10, 2024 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by ‘Newsmeter

Advertisement

வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தியதாக வீடியோ வைரலானது இது குறித்து உண்மைச் சரிபார்ப்பை காணலாம்.

சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் போராட்டம் செய்யும் பொதுமக்களை போலீசார் தடியடியால் அடிப்பதைக் காணலாம். பீகாரில் வக்ஃபுக்கு வாரிய திருத்தச் மசோதாவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களை போலீசார் தாக்குவதாகவும் இந்த சம்பவம் நடைபெற்றது பீகார் என்றும் எழுத்தப்பட்டு வீடியோ வைரலானது.

ஃபேஸ்புக் பயனர் ஒருவர் இந்த வீடியோவைப் பகிர்ந்து “ பீகாரில் வக்பு வாரியத்தை சட்ட மசோதாவை எதிர்த்து போராட்டம் என்ற பெயரில் அராஜகம் செய்யும் சமூகத்திற்கு காவல்துறை தடியடியால் தங்களால் இயன்ற சேவை செய்தனர் " என்று எழுதினார்.

உண்மைச் சரிபார்ப்பு:

சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோவை நியூஸ் மீட்டர் உண்மைச் சரிபார்ப்புக்கு உட்படுத்தியது. விசாரணையில் இந்த வீடியோ தவறான கூற்றுடன் வைரலாகி வருவதைக் நியூஸ் மீட்டர் கண்டறிந்தது. மேலும் இந்த வீடியோ பழையது மற்றும் இதற்கும் வக்ஃப் மசோதாவுக்கு எதிரான போராட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

வைரலான வீடியோ குறித்து உண்மையைக் கண்டறிய கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலை மேற்கொண்டபோது, ஆகஸ்ட் 28, 2015 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட அதே வீடியோவைக் கண்டோம். இந்த செய்தி அறிக்கை மூலம் பீகார் மாநிலம் பாட்னாவில் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2 ஆண்டுகளாக நிலுவைத் தொகை வழங்கப்படாததால் போராட்டம் நடத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வீடியோ செப்டம்பர் 22, 2018 அன்று மிட்டே இந்தியா யூடியூப் சேனலிலும் பகிரப்பட்டது. மேலும் இரண்டு ஆண்டுகளாக நிலுவைத் தொகையை செலுத்தாத மாநில அரசுக்கு எதிராக பீகார் மாநில மதரஸா ஆசிரியர் சங்கம் தலைமையிலான ஆசிரியர்கள் நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு 2015 ஆம் ஆண்டு பீகாரில், மதரஸா ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்காததால் மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய தற்போதைய வக்பு வாரிய சட்ட மசோதாவிற்கு எதிரான போராட்ட வீடியோ போல வைரலாகியுள்ளது.

முடிவு:

வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தியதாக வீடியோ வைரலானது. இதனை உண்மைப் சரிபார்ப்புக்கு உட்படுத்தியதில் 2015 ஆம் ஆண்டு பீகாரில், மதரஸா ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்காததால் மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய வீடியோ இதனோடு தொடர்புபடுத்தி வைரலாகியுள்ளது. இது தவறானது.

Note : This story was originally published by ‘Newsmeter’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Biharviral videoWakf BillWakf Bill Amendment
Advertisement
Next Article