Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்திக்கு ஆதரவாக ஆனி ராஜா பிரசாரத்தில் ஈடுபட்டாரா?

03:52 PM May 21, 2024 IST | Web Editor
Advertisement

This News is Fact Checked by ‘Fact Crescendo'

Advertisement

உத்தரப்பிரதேசம் ரேபரேலி தொகுதியில், காங். தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக வயநாடு தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆனி ராஜா பிரசாரத்தில் ஈடுபட்டார் என பகிரப்பட்டு வரும் பதிவு பொய்யானது என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆனி ராஜாவும், காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியும் போட்டியிட்டனர். வயநாடு தொகுதி மட்டுமின்றி ரேபரேலியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். ராகுல் காந்திக்கு ஆதரவாக ரேபரேலியில் பிரசாரம் செய்ய ஆனி ராஜா சென்றதாக ஒரு பதிவு வைரலாகி வருகிறது.

அந்த பதிவில், ஆனி ராஜாவும் அவரது கணவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டி.ராஜாவும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “வயநாட்டில் ராகுலை எதிர்த்து போட்டியிட்ட ஆனி ராஜா, ரேபரேலியில் ராகுல் காந்திக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்” என தலைப்பிடப்பட்டிருந்தது. ஆனால் Fact Crescendo விசாரணையில் இது முற்றிலும் பொய் என்று கண்டறியப்பட்டது.

உண்மை சரிபார்ப்பு:

ரேபரேலியில் ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சாரத்தில் ஆனி ராஜா பங்கேற்றாரா என்பதை அறிய இணையத்தில் பகிரப்பட்ட செய்திகளில் தேடப்பட்டது.  ஆனால் வைரல் பதிவில் உள்ள கூற்றை உறுதிப்படுத்தும் செய்தி எதுவும் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக ரேபரேலியில் ராகுல் காந்தி,  வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு ஆனி ராஜா அவரை விமர்சித்ததாக எகனாமிக் வெளியிட்டிருந்த செய்தியில் கண்டறியப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் வேட்புமனு தாக்கல் செய்வது அரசியல் நெறிமுறை அல்ல என்றும், வயநாட்டு வாக்காளர்களுக்கு தனது விருப்பத்தை தெரிவிக்காமல் இருப்பது அவர்களுக்கு அநீதி இழைக்கிறது என்றும் கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர் ஆனி  ராஜா தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் இதுகுறித்து ஆனி ராஜாவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது அவர், “ரேபரேலியில் நான் ஏன் ராகுல் காந்திக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும்? அத்தகைய கோரிக்கையை எனது கட்சி ஒருபோதும் கேட்காது. ராகுல்காந்தி இம்மாத இறுதியில் ஒடிசாவில் தேர்தல் பிரசாரத்திற்கு செல்கிறார். இது கட்சியின் உத்தரவுப்படி நடக்கிறது.” என தெரிவித்தார்.

மேலும் ஆனி ராஜா ET க்கு அளித்த பேட்டியில், ராகுல் காந்தி இரு தொகுதி வாக்காளர்களுக்கும் அநீதி இழைத்து வருவதாகவும், ரேபரேலியில் வெற்றி பெற்றால் வயநாட்டை ராகுல் கைவிட்டுவிடுவார் என மக்கள் நினைக்கலாம் என்றும் கூறியிருந்தார். 

இறுதியாக, ஆனி ராஜா ராகுல் காந்திக்காக பிரசாரம் செய்ய ரேபரேலிக்கு செல்லவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

முடிவு:

மக்களவைத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்திக்கு ஆதரவாக வயநாட்டில் ராகுல் காந்தியின் எதிர் வேட்பாளராக போட்டியிட்ட ஆனி ராஜா பிரசாரம் செய்யச் சென்றுள்ளார் என்ற கூற்று தவறானது என நிரூபணம் செய்யப்பட்டது.

Note : This story was originally published by ‘Fact Crescendo’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective…

Tags :
Annie RajacampaignCongressElections2024Loksabha Elections 2024News7Tamilnews7TamilUpdatesRaebareliRahul gandhiWayanad
Advertisement
Next Article