Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பூரி ஜெகந்நாதர் கோயில் கருவூல அறையின் சாவியுடன்தான் மோடி திரும்பிச்செல்வார் என்று அண்ணாமலை கூறினாரா? உண்மை என்ன?

09:42 PM May 31, 2024 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by Newschecker

Advertisement

பூரி ஜெகந்நாதர் கோயிலின் சாவியுடன்தான் பிரதமர் மோடி தமிழ்நாட்டிலிருந்து செல்வார் என அண்ணாமலை பேசியதாக பரப்பப்படும் செய்தி போலியானது என Newschecker விசாரணையில் வெளிவந்துள்ளது. 

Claim: பூரி ஜெகந்நாதர் கோயிலின் சாவியுடன்தான் பிரதமர் மோடி தமிழ்நாட்டிலிருந்து செல்வார் என அண்ணாமலை பேச்சு.

Fact: இணையத்தில் பரவும் இந்த செய்தி போலியானது என பாஜக தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் தவறாக பரவும் இந்த தகவல்  போலியானது என Newschecker விசாரணையிலும் தெரியவந்துள்ளது.

பிரதமர் மோடி கடந்த 20ஆம் தேதி ஒடிசாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “பூரி ஜெகந்நாதர் கோயிலின் கருவூல அறையின் சாவி தமிழ்நாடு சென்றுவிட்டதாக மக்கள் கூறுகின்றனர். அதைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பியது யார்?” என்று கேள்வி எழுப்பி இருந்தார். இது பெரும் சர்ச்சையை எழுப்பியது.

இந்நிலையில், பிரதமர் மோடி 3 நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தந்துள்ள நிலையில், “மூன்று நாள் தியானம் முடிந்து பிரதமர் திரும்பி செல்லும் போது பூரி ஜெகந்நாதர் கோயில் கருவூல சாவியுடன்தான் திரும்பி செல்வார்” என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக குறிப்பிட்ட தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்தத் தகவலின் உண்மைத் தன்மை குறித்து Newschecker சார்பில் ஆய்வு செய்யப்பட்டது. வலைதளத்தில் வைரலாகும் நியூஸ்கார்டு ஆனது தினமலரின் நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்த நிறுவனம் இவ்வாறான நியூஸ்கார்டை வெளியிட்டதா? என அதன் சமூக வலைதள பக்கங்களில் தேடப்பட்டது.

இந்தத் தேடலில், மே 28, 2024 அன்று அந்த நிறுவனத்தினால் சமூக ஊடக பக்கங்களில் வைரலாகும் அவ்வாறான நியூஸ்கார்டு பகிரப்படவில்லை. தொடர்ந்து தேடுகையில் “தமிழக அமைச்சர்கள் 11 பேர் மீது ஊழல் வழக்கு உள்ளது. மேலும் 3 பேர் சிறை செல்லப்போவது உறுதி” என்று அண்ணாமலை பேசியதாக ஜனவரி 10, 2024 அன்று தினமலர் நியூஸ்கார்டு ஒன்றை வெளியிட்டிருந்ததை கண்டறிந்துள்ளனர். அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் ஒப்பிட்டுள்ளனர். சமூக வலைதளத்தில் வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து விசாரிக்கையில், அது போலியானது என பாஜக தரப்பும்m உறுதி செய்துள்ளது.

Conclusion

இந்த நிலையில், தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூல அறையின் சாவியுடன்தான் திரும்ப செல்வார் என்று அண்ணாமலை கூறியதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது என கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

Note : This story was originally published by ‘Newschecker’ and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
AnnamalaiFactcheckerKeyMisInformationNarendra modiPuri Jagannath TempleTamilNadu
Advertisement
Next Article